/* */

நெல்லை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை காரணமாக, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் உயர் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்

HIGHLIGHTS

நெல்லை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
X

நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை தொடர்பாக உயர் காவல்துறை அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருடன் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.

நெல்லை மாவட்டத்தில் தொடர் கொலை காரணமாக தமிழக டிஜிபி தலைமையில் உயர் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து ஜாதிய கொலைகள், கொள்ளைகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கூலிப்படைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இன்று நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அங்குள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு, நெல்லை மாநகரம், நெல்லை மாவட்டம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய காவல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது தென் மாவட்டங்களில் ஜாதி மற்றும் முன்விரோத கொலைகள் அதிகரித்து வருவது தொடர்பாக அதிகாரியிடம் கேட்டறிந்தார். இதனை கட்டுப்படுத்த காவல்துறை முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அன்பு, நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரை கண்ணன், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன், நெல்லை மாநகர காவல்துறை சட்டம்- ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ்குமார், நெல்லை மாநகர காவல்துறை போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையர் சுரேஷ்குமார், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இதனைத் தொடர்ந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் மாவட்டங்களில் கடந்த 2012 முதல் 2013 வரை நடைபெற்ற கொலைகளுக்கு பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நெல்லை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இந்த கொலைகள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் வகையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 48 மணி நேரத்தில் ரவுடிகளை ஒழிப்பதற்காக ஆப்ரேஷன் டிஸ் ஆர்ம் சோதனையின் போது 2,512 ரவுடிகளை கைது செய்துள்ளோம். 934 துப்பாக்கி கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கூலிப்படைகளை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பழிக்குப்பழியாக நடைபெறும் கொலைகளுக்கும் கடுமையான தண்டனை வாங்கித்தர தமிழக காவல்துறை செயலாற்றி வருகிறது. தொடர்ந்து கூலிப்படையினர் தமிழகத்தில் கண்காணிக்க படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Updated On: 25 Sep 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை