/* */

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும், மனமகிழ்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
X

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றம்.

நெல்லை அருகே உள்ள பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும், மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், பயிற்சியில் ஆர்வமூட்டவும், காவல் பயிற்சி முதல்வர் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது.

பயிற்சி பள்ளி துணை முதல்வர், ஏடிஎஸ்பி., அனிதா தொடக்கவுரை வழங்கினார். வந்திருந்தவர்களை காவல் ஆய்வாளர் பாபுனி வரவேற்று பேசினார். பட்டிமன்ற நடுவராக முனைவர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன் செயல்பட்டார். ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியுமா? முடியாதா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

முடியும் என்று சொல்லரசி சீதாபாரதி, நாஞ்சில் ஆசிரியை பாமா, பயிற்சி பள்ளி மாணவிகள் மஞ்சு, ப்ரித்தி ஆகியோரும் வாதிட்டனர். முடியாது' என்று நாவலர் முனைவர் இராம பூதத்தான், பயிற்சி பள்ளி மாணவிகள் நாகதேவி, கோபிகா, எழுத்தாளர் மூ.வெ.ரா ஆகியோரும் வாதிட்டனர்.

நிறைவாக நடுவர் முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியும். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை. உங்களால் எதையும் சாதிக்க முடியும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு செயல்பட்டால் சாதனை கண்டிப்பாக நிகழும் என்று தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து பயிற்சி பள்ளி மாணவிகளின் தனித்திறமைகளும், வீர தீர விளையாட்டுகளும் நடைபெற்றது.

Updated On: 3 April 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  3. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  4. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  5. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  6. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  7. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  8. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  9. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  10. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை