/* */

நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணியினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

தாமிரபரணியாறு, நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டம் கலைஞரின் கனவுத் திட்டம் - சபாநாயகர் அப்பாவு

HIGHLIGHTS

நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணியினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்
X

நெல்லை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் பாலம் கட்டும் பணியினை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்ததார்.

தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்புத் திட்டம் கருணாநிதியின் கனவு திட்டம் ஆகும். இதில் யாருடைய ஆதாயத்துக்காகவும் திமுக வளைந்து கொடுக்காது என புதிய பாலம் கட்டுமான பணியின் துவக்க நிகழ்ச்சியில் சபாநாகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ள காலத்தில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை ராதாபுரம், சாதான்குளம் உள்ளிட்ட வறட்சியான பகுதிக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 2007-2008-ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் தாமிரபரணி , நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிகளை இணைக்கும் வகையில் இந்தியாவிலேயே முதன் முறையாக 369 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக 214 கோடி நீதி கொடுக்கப்பட்டு நதிநீர் இணைப்புத்திட்டத்தை தொடங்கினார். இதில் இரண்டு கட்ட பணிகள் முழுமையாக முடிந்துள்ள நிலையில், நெல்லை–கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் 17.09 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டுப்பணியினை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தொடங்கி வைத்ததார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மறைந்த தலைவர் கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணியாறு , நம்பியாறு மற்றும் கருமேனியாறு இணைப்புத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளது. தற்போது நெல்லை –கன்னியாகுமரி சாலையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரெயில்வே பாலம் ஒன்றும் கட்டப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விரைவு படுத்தப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் கடலில் வீணகாக கலக்கும் தண்ணீர் வெள்ளநீர் கால்வாய் வழியாக ராதாபுரம் , சாதான்குளம் , நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் பயன்பெறும் என்று கூறினார்.

Updated On: 5 Aug 2021 4:18 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது