/* */

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள்

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட மனுக்கள்
X

பயனாளி ஒருவருக்கு தையல் எந்திரம் வழங்கினார் நெல்லை கலெக்டர் விஷ்ணு.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு தலைமையில் இன்று 18.04.2022 நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து மாற்றுத்திறனாளிகள் உதவித்தெகை, முதிர்கன்னி உதவித்தொகை, விபத்துமரண உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மற்றும் பட்டா மாறுதல் வேலைவாய்ப்பு, மற்றும் குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான சுமார் 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து மனுக்களை பரிசீலனை செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகள் மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிவுறுத்தினார்.

முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளை இருக்கையில் அமரவைத்து அவர்களது இருக்கைக்கு சென்று அவர்களது கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இலவச தையல் இயந்திரம் கேட்டு விண்ணப்பித்திருந்த 10 பயனாளிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக சத்திய வாணிமுத்து அம்மையார் நினைவுத் திட்டத்தின் கீழ் ரூ.60ஆயிரம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம்(பொ) ஷேக் அயூப் ,மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் நல அலுவலர் சரஸ்வதி உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 April 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...