/* */

அண்ணல் அம்பேத்கர் 131வது பிறந்தநாள்

அண்ணல் அம்பேத்கர் 131வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

அண்ணல் அம்பேத்கர்  131வது பிறந்தநாள்
X

அண்ணல் அம்பேத்கர் பல்வேறு மத, இன, மொழி, சமூக பழக்க வழக்கங்கள் கொண்ட இந்திய நாட்டை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒருங்கிணைத்த அரசியல் மாமேதை. இவர் தேசிய தலைவராகவும் திகழ்ந்தவர். சமத்துவத்தை வலியுறுத்தியவர்.

அம்பேத்கர் மராட்டிய மாநிலத்தில் கொங்கண் மாவட்டத்தில் உள்ள அம்பவாடே என்னும் சிற்றூரில் 1891ம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் இராம்ஜி சக்பால், பீமாபாய் ஆகியோருக்கு பதினான்காவது பிள்ளையாகப் பிறந்தார். அம்பேத்காரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜீ. தந்தையார் இராம்ஜீ சக்பால் இராணுவ பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பீமாராவ் இளம் வயதில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.

1900-ல் தனது தொடக்கக் கல்வியை முடித்த அம்பேத்கார் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். தண்ணீர் பருக வேண்டுமெனில் பிறர் ஊற்ற கையால் பருக வேண்டும். வகுப்பறையில் அமர தனியே கோணிப்பை வீட்டிலிருந்து கொண்டு வரவேண்டும். இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்கரின் பிஞ்சு மனம் வெம்பியது. இவர் மீது அன்பு கொண்ட பீமாராவின் ஆசிரியர் மகாதேவ அம்பேத்கர் அம்பேகர் என்ற இவரின் குடும்பப் பெயரை அம்பேத்கர் என்று மாற்றி பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று அழைக்கச் செய்தார்.

முதல் உலகப் போருக்கு பின்னர் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகாண கிங்டன்யங் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் 1935ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது.

ஒவ்வொருவரும் முழுமனித நிலையை அடைய கல்வி, செல்வம், உழைப்பு இம்மூன்றும் தேவை என்றும் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம் என்றும், உழைப்பும், கல்வியும் அற்ற செல்வம் மிருகத் தனம் என்றும் கூறினார்.கல்வி என்பது தகவல்களை திணிப்பதாக இருக்கக்கூடாது. அது ஒருவனது ஊக்கத்தை தூண்டுவதோடு தனித்தன்மையை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும் என்பது கல்வி பற்றி அம்பேத்கரின் கருத்தாகும்.

1946ஆம் ஆண்டு மக்கள் கல்வி கழகத்தை தோற்றுவித்தார். மும்பையில் இவர் உருவாக்கிய சித்தார்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்து பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

Updated On: 14 April 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!