/* */

34 அம்மன் கோயில்களின் சப்பரங்கள் அணிவகுப்பு

Amman Kovil -தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் 34 அம்மன் கோவில்களின் சப்பரங்கள் அணி வகுப்பு நடந்தது.

HIGHLIGHTS

34 அம்மன் கோயில்களின் சப்பரங்கள் அணிவகுப்பு
X

நெல்லையில் தசரா சப்பரம் ஊர்வலம் நடந்தது.

Amman Kovil -நெல்லை மாவட்டத்தில் விஜயதசமி தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாநகாில் பல்வேறு வீதிகளில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் 34 சப்பரங்களின் அணி வகுப்பு நடைபெறுவது தனி சிறப்பு ஆகும். தென் மாவட்டத்தில் நெல்லையில் நடைபெறும் தசரா திருவிழா முக்கியமானது. குறிப்பாக பாளையங்கோட்டை மற்றும் நெல்லையில் அமைந்துள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களில் இருந்தும் அம்மன் சப்பர பவனி புறப்படும். கொரனா காரணமாக கடந்த 2ஆண்டுகளாக சப்பர பவனி நடத்தப்படாமல் இருந்தது.அதனால் இந்த ஆண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டுக்கான தசரா விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி ஏற்றப்பட்ட நாளில் இருந்து நகரில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் தினமும் சிறப்பு பூஜைகள், அம்மன் அலங்காரம் நடைபெற்றது. விஜயதசமி தினத்தன்று நெல்லை மாநகாில் அமைந்துள்ள பிட்டாபுரத்தி அம்மன், துர்க்கை அம்மன், தேவி மாரியம்மன், தேவி ஸ்ரீ சுந்தராட்சி அம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், வலம்புரி அம்மன், ராஜேசுவரி அம்மன், திரிபுரசுந்தரி அம்மன், மாரியம்மன், அறம் வளர்த்த நாயகி அம்மன், தங்கம்மன், ஸ்ரீ ஆயுள்பிராட்டி அம்மன், நல்லமுத்து அம்மன் உள்பட 34 அம்மன் கோவில்களில் இருந்து அம்மன் சப்பர பவனி புறப்பட்டு நெல்லையப்பா் ரத வீதிகளில் வலம் வந்தன.

பின்னா் அனைத்து அம்மன் சப்பரங்களும் சக்தி தரிசனம் என்று நெல்லையப்பர் கோயில் முன்பு அணி வகுத்து நின்றன. சக்தி தரிசன மேடையில் பிரத்யங்கராதேவி சிவபூஜை செய்யும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அனைத்து அம்மனுக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை காட்டப்பட்டது. சப்பரங்கள் இரவில் மின் விளக்குகளால் சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலித்தன. இது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கொரனாவிற்கு பின் 2 வருடங்கள் கழித்து சப்பர பவனி நடந்ததால் சப்பரங்களின் அணிவகுப்பை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் அங்கு குவந்து இருந்தனர்.

நெல்லையப்பர் திருக்கோவில் முன்பு சக்தி தரிசனம் நிகழ்ச்சியில் 34 அம்மன் கோயில்களின் சப்பரங்கள் நேர்வரிசையில் அணிவகுத்து நின்று இருந்ததை பக்தர்கள் கண்டு தாிசனம் செய்தனர். நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம் போல ரதவீதிகள் முழுவதும் பக்தர்கள் குவிந்ததால் விடிய விடிய நெல்லை மாநகரம் விழாக்கோலம் பூண்டது. விழா ஏற்பாடுகளை நெல்லை கல்சுரல் அகடமி மற்றும் தென் மாவட்ட அனைத்து சமுதாய பூஜாரிகள் சங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்த தசரா திருவிழாவை யொட்டி பக்கதர்கள் வந்து செல்வதற்கு வசதியாக கூடுதல் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 7 Oct 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...