கள்ளக்காதலால் மனைவியை குத்தி காென்ற கணவன்: பாேலீசில் சரண்

பணகுடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் மாரியப்பன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கள்ளக்காதலால் மனைவியை குத்தி காென்ற கணவன்: பாேலீசில் சரண்
X

கூலி தொழிலாளி மாரியப்பன்.

நெல்லை மாவட்டம் பணகுடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் பணகுடி போலீசில் சரண்.

நெல்லை மாவட்டம் பணகுடி அண்ணாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி இறந்து விட்டதால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருவரும் பணகுடி தனியார் செங்கள் சுளையில் வேலை செய்து வந்தனர். அப்போது அமுதாவிற்கு அங்கு வேலை செய்யும் மற்றொரு நபருக்கும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனை நேரில் கண்ட மாரியப்பன் அவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறி வந்துள்ளார். இந்நிலையில் அமுதா கைவிட மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை தன்னுடன் வேலைக்கு வருமாறு அமுதாவை அழைத்துச் சென்று அண்ணாத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அமுதாவை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சராமரியாக குத்தினார். இதில் அமுதா இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

பின்பு மாரியப்பன் நேராக பணகுடி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்து தனது மனைவி அமுதாவை குத்தியதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் பணகுடி போலீசார் விரைந்து சென்று இரத்த காயங்களுடன் கிடந்த அமுதாவை மீட்டு பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிட்சை பலனளிக்காமல் அமுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரணடைந்த மாரியப்பன் மீது பணகுடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Dec 2021 12:38 PM GMT

Related News