/* */

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு

நெல்லை அரசு மருத்துவமனையில் ரூ.125 லட்சம் மதிப்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை சபாநாயகர், அமைச்சர் திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் திறப்பு
X

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தினை சபாநாயகர் மு.அப்பாவு, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தினை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு| தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் மற்றம் தலைக்காய உயர்சார்பு சிகிச்சைப்பிரிவு கட்டடத்தை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மு.அப்துல்வகாப் (பாளையங்கோட்டை), ரூபி.ஆர்.மனோகரன் (நாங்குநேரி), மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.125 இலட்சம் மதிப்பீல் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியானது. 10.09.2021 அன்று தொடங்கப்பட்டு 27.12.2021 அன்று முடிவடைந்தது. ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தின் தள அளவு 96.35 ச.மீ ஆகும். ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரத்தில் உற்பத்தி திறன் 1000 லிட்டர்/ நிமிடம் ஆகும்.

மேலும் 3000 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்பு ஆக்ஸிஜன் கலன் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு 600 படுக்கைகள் அமைக்கப்பட்ட பிரதான கட்டடத்தில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ஆண்டுக்கு சுமார் 16000 நோயாளிகள் பயன்பெறுவார்கள்.

மேலும், திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தலைக்காய உயர்சார்பு சிகிச்சைப்பிரிவு கட்டடம் கட்டும் பணி ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை இன்று திறந்து வைக்கப்பட்டு உயர்சார்பு சிகிச்சைப்பிரிவு கட்டடத்தின் தள அளவு 98.06ச.மீ ஆகும். இக்கட்டடத்தில் சுமார் 10 தலைகாய நோயாளிகளுக்கான படுக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரனங்களை நுன் கிருமி கலை நீக்கி மறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த ரூ.31 இலட்சம் மதிப்பீல் நுன்கிருமிகள் நீக்கும் கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 Dec 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!