/* */

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து

HIGHLIGHTS

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன்
X

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட 4.820 மெட்ரிக் டன் ஆக்சிஜன் பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் சேமிக்கப்பட்டது.

நாடுமுழுவதும் கொரோனா 2-வது அலை அதிகவேகமாக பரவி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதியாகியுள்னர் .

நோய் தாக்கம் அதிதீவிரமாக உள்ளதால் ஆக்சிஜன் அதிக அளவில் தேவைப்படுகிறது. இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி மக்கள் போராட்டத்தால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் முடிவு செய்யப்பட்டு இன்று முதல்கட்டமாக 4.820 மெட்ரிக்டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

இங்கு பாதுகாப்புடன் வந்த லாரியில் இருந்து ஆக்சிஜன் மருத்துவமனை சேமிப்பிக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது.

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் வசதியுடன் 900 ஆயிரத்திற்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளது. இந்த படுக்கைகள் முழுவதும் நிரம்பிவிட்டதால் நாள் ஒன்றுக்கு 6 டன்னுக்கு குறையாமல் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

மேலும் நெல்லை மருத்துவமனையில் நெல்லை , தூத்துக்குடி, கன்னியாகுமரி , விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வந்து அனுமதியாவதால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே நோயாளிகளை காக்கும் பொருட்டு தஞ்சாவூர் , நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும் ஆக்சிஜன் வந்து கொண்டு இருந்தது. தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஓரளவு ஆக்சிஜன் தட்டுப்படு கட்டுக்குள் வரும் என கூறப்படுகிறது.

Updated On: 13 May 2021 4:35 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  4. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  6. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  7. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  8. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  9. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  10. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்