/* */

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்

Trichy News Tamil -திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்
X

தீக்குளிக்க முயன்றவரின் தலையில் போலீசார் தண்ணீர் ஊற்றினர்.

Trichy News Tamil - திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவர் இன்று தன்னுடைய மனைவி மற்றும் மகனுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென கையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தலையில் ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சிவநேசனை தடுத்து நிறுத்தினார். அவரது உடலில் தண்ணீரை ஊற்றி அதன் பின்னர் அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர்.

இது தொடர்பாக சிவநேசன் கூறும்போது

நான் திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியில் பாரம்பரியமாக விவசாயம் செய்து கொண்டு எங்களது குடும்ப இடத்தில் வாழ்ந்து வருகிறேன். எங்கள் வீட்டின் அருகே அரசு பள்ளி 12 வருடமாக செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டப்போவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து எங்கள் வீட்டின் முன்பாக பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி சுற்றுச் சுவர் கட்ட ஏற்பாடு செய்துவிட்டார்கள். இதனால் எங்கள் வீட்டிற்குள் நாங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தோம் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.இதனால் மனவேதனையில் இருந்த நான் இன்று குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என்றார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குடும்பத்தோடு தீக்குளிக்க சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 11:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  2. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  3. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  4. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  5. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  6. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  9. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  10. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...