/* */

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம்

திருச்சியில் நடந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம்
X

திருச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளி ஒருவருக்கு ஆட்சியர் பிரதீப்குமார் தையல் எந்திரம் வழங்கினார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, நலத் திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், திருமண உதவித் தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 471 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ. 3600-மதிப்புள்ள இலவச தையல் இயந்திரங்களையும், அறிவுசார் குறைபாடுடைய 3 விதமான மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகள் எழுதுவதற்கு உதவியாளரை வைத்து கொள்ளும் அனுமதிக்காக மனநல மருத்துவரின் சான்றிதழையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும், 6 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தனித் துணை ஆட்சியர் சி.அம்பிகாபதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 18 July 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  7. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  8. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு
  10. நாமக்கல்
    வீடு ஒதுக்கீடு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா வங்கிக் கடன்:...