/* */

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. போராட்டம்

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் டி.டி.வி. தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

HIGHLIGHTS

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து  அ.ம.மு.க. போராட்டம்
X

மேதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் டி.டி.வி.  தினகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது;-

தி.மு.க.ஆட்சியில் மக்களின் பிரச்சனை காற்றில் பறக்கவிடப்படும். அதுதான் நமக்கு பயம்.தமிழ்நாட்டு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கிற வேளையில் தி.மு.க. ஈடுபட்டு வருகிறது.

இருக்கின்ற 85 சதவீத மக்களின் வாழ்க்கையை பூர்த்தி செய்வது காவிரித்தாய் தான்.தமிழ்நாட்டு பிரச்சினையில் எப்போதும் தி.மு.க.கோட்டை விட்டு விடும்.அணையை கட்ட தமிழக அரசு அனுமதித்தால் தமிழகம் சோமாலியாவாக மாறி விடும்.

தமிழ்நாட்டு பிரச்சினைக்கு விடியல் ஆட்சி இருக்க வேண்டும்.மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்.அணை கட்டும் பிரச்சினைக்கு பதிலாக காடுகள் வளர்ப்பு திட்டத்தில் கவனம் செலுத்துங்கள்.

தற்போது நிலத்தடி நீர் வற்றி வருகிறது. அதை அதிகப்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.காடு வளர்ப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விடாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும்.

தி.மு.க.விற்கு உள்ளாட்சியிலும், நகராட்சியிலும் மக்கள் அப்பாவியாக வாக்களித்து விட்டார்கள்.இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த பத்து மாத ஆட்சியில் இது மக்களுக்கு விடியல் ஏற்படவில்லை.

தி.மு.க. மேகதாதுவில் அணை கட்ட விடாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அம்மாவின் உண்மையான தொண்டர்கள் நாங்கள் தான்.எங்களின் இயக்கமே போராட்டத்தில் தொடங்கி போராட்டத்தில் பயணிக்கிற இயக்கம்.

ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் கொண்டுவர எங்கள் இயக்கம் தொடங்கி உள்ளோம்.இலக்கை அடையும் வரை தொடர்ந்து போராடுவோம்.மக்கள் பிரச்சினைக்காக போராடுவோம் ஜனநாயகப் போராளி நாங்கள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று பேசினார்.


இதில் விவசாய சங்கங்களின் சார்பில் பி.ஆர்.பாண்டியன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள்,அ.ம.மு.க. மாநில பொருளாளரும் மாவட்ட செயலாளருமான மனோகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் ராஜசேகரன், கலைச்செல்வன், கவுன்சிலர் செந்தில்நாதன், அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, பேரவை செயலாளர் வக்கீல் தினேஷ்பாபு, பகுதி செயலாளர்கள் வேதாத்ரிநகர் பாலு, தனசிங், மனோஜ்குமார் உள்ளிட்ட ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர். அவர்கள் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் போக்கை மத்திய, மாநில அரசுகள் முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். தி.மு.க. அரசு இதில் முழுமையாக கவனம் செலுத்தி இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 14 March 2022 12:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை