/* */

டூவீலரே ஓட்டாத திருச்சி காஜாமலை நபருக்கு கறம்பக்குடி போலீஸ் விதித்த அபராதம்

டூவீலரே ஓட்டாத திருச்சி காஜாமலை நபருக்கு கறம்பக்குடி போலீசார் ரூ.1000 அபராதம் விதித்து அதிர்ச்சி அளித்துள்ளனர்.

HIGHLIGHTS

டூவீலரே ஓட்டாத திருச்சி காஜாமலை நபருக்கு கறம்பக்குடி போலீஸ் விதித்த அபராதம்
X

தமிழகத்தில் திருத்தப்பட்ட போக்குவரத்து வாகன சட்ட விதிமுறைகளின் படி டூவீலர் எனப்படும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அதாவது ஹெல்மெட் அணியவில்லை என்றால் போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்து வருகிறார்கள். முன்பெல்லாம் ஹெல்மெட் அபராதம் ரூ. 100 என்ற நிலையில் அது தற்போது 10 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ. 1000 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் போலீசார் இருசக்கர வாகனங்களில் அணியாமல் செல்பவர்களை வளைத்து வளைத்து பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். இதன் காரணமாக இரு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இருசக்கர வாகனம் அணியாமல் வாகனம் ஓட்டி செல்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதிப்பது அவர்களது கடமை. ஆனால் டூவீலர் ஓட்டாத ஒருவருக்கு வண்டியை தனது கடை முன் நிறுத்தி இருப்பவருக்கு நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்று உள்ளீர்கள். உங்களுக்கு ரூ. 1000 ஆபராதம் பிரித்து இருக்கிறோம் என போலீசார் ஒருவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் அந்த நபருக்கு எப்படி ஒரு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள கீழே படிப்போம்.

போலீசார் அளித்துள்ள இந்த குறுந்தகவலால் அதிர்ச்சி அடைந்து இருக்கும் நபர் பெயர் நேரு. இவர் திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று மாலை 7 மணி அளவில் இவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் அவரது பேஷன் ப்ரோ வாகன எண் டி. என். 45 சி.ஏ. 7470 என்ற வாகனத்திற்கு அவரது வீட்டு முகவரி ஆகியவற்றை குறிப்பிட்டு ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இந்த செய்தியை பார்த்து நேரு அதிர்ச்சி அடைந்தார்.


நான் இன்று முழுவதும் வெளியே செல்லவில்லை எனது இரு சக்கர வாகனத்தையும் ஓட்டவில்லை. எனது கடை முன் வாகனத்தை நிறுத்திவிட்டு நான் எனது தொழிலை பார்த்துக்கொண்டு கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் இப்படி ஒரு குறுந்தகவல் வந்து இருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எனக்கு இந்த குறுந்தகவல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி போக்குவரத்து போலீஸ் நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. கரம்பக்குடிக்கு நான் இன்று போகவே இல்லை. இந்த நிலையில் செல்லாத ஊருக்கு, ஓட்டாத வாகனத்திற்கு அபராதம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை யாரிடம் முறையிடுவது என்றும் தெரியவில்லை என புலம்பி வந்தார் நேரு.

இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து ஏதோ தவறு நடந்து விட்டது என போலீஸ் அதிகாரி ஒருவர் தனது செல்போனில் பேசியதால் அதிர்ச்சியில் இருந்து சற்று மீண்டு உள்ளார் நேரு.

Updated On: 2 Dec 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!