திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை

திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சியில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கு மாநகராட்சி பரிந்துரை
X

திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் திருச்சி மாநகராட்சி பகுதிகளுக்கான விரிவான பொது போக்குவரத்து திட்டம் (சி.எம்.பி) குறித்த ஆய்வறிக்கை மாமன்ற ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. அப்போது, இத்திட்டம் தொடர்பாக தனியார் நிறுவன அலுவலர் அழகப்பன் விளக்கமளித்து கூறியதாவது:

திருச்சி மாநகருக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தேவையான பொதுப் போக்குவரத்து திட்டம் குறித்த 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மூலமாகவே, திருச்சிக்கான மெட்ரோ ரயில் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை கொண்டு வர முடியும்.

கடந்த ஒரு வருடமாக திருச்சி மாநகரம் மட்டுமின்றி அருகிலுள்ள நகரம், ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 22 சதவீதம் பேர் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றான மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இந்தியாவிலுள்ள மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடும்போது, திருச்சியில் பொதுபோக்குவரத்து அதிகமாக உள்ளது. குறைந்தபட்சம் நாள்தோறும் 6.41 கி.மீ தொலைவுக்கு பேருந்துகளை சராசரியாக பயன்படுத்துகின்றனர். இதுதவிர 11 சதவீதம் பேர் பாதசாரிகளாகவும், 4 சதவீதம் பேர் சைக்கிளிலும், 41 சதவீதம் பேர் இருசக்கர வாகனத்திலும், 11 சதவீதம் பேர் காரிலும் செல்கின்றனர். மாநகர சாலைகளில் சராசரியாக 26 கி.மீ சராசரி வேகத்தில் பயணிக்க முடிகிறது. மற்ற நகரங்களை ஒப்பிடுகையில், இதுவும் சிறப்பாகவே இருக்கிறது.

இவை தவிர, மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த திருச்சியில் 68 கி.மீ.க்கு தேவை உள்ளது. இதனை 3 வழித்தடங்களாக பிரித்துள்ளோம். சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் பகுதியிலுள்ள ரிங்ரோடு வரை 23.3 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவற்றில் எங்கெங்கு நிறுத்தங்கள் அமையும், எந்த வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்பது குறித்து, அடுத்து நடைபெறக்கூடிய விரிவான திட்ட அறிக்கையின்போது தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 29 March 2023 5:05 PM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    கோவை தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்துவதாக கூறி கொள்ளை
  2. கோவை மாநகர்
    கோவை குனியமுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ் நிலையம் திறப்பு
  3. கோவை மாநகர்
    கோவை கூடைப்பந்து போட்டியில் இந்திய கப்பல் படை அணி வெற்றி
  4. ஈரோடு
    ஈரோடு: கனரா வங்கி சார்பில் இலவசமாக துரித உணவு தயாரித்தல் பயிற்சி
  5. கோவை மாநகர்
    கோவை ஜி.சி.டி.யில் படித்து 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்த...
  6. இந்தியா
    150 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் ஆதாரங்கள்
  7. வேலூர்
    தார் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்
  8. சேலம்
    முதல்வர் சேலம் வருகை: முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
  9. டாக்டர் சார்
    does multani mitti remove acne முகப்பருவைப்போக்கி ஆரோக்ய சருமத்தைப் ...
  10. நாமக்கல்
    மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: நாமக்கல், கோவை மாவட்ட அணிகள்...