/* */

திருச்சியில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு போட்டி

திருச்சியில் வாக்குப்பதிவை வலியுறுத்தி மையை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வு போட்டி நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

திருச்சியில் வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு போட்டி
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்துவதற்கான விழிப்புணர்வு போட்டி சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் "எனது வாக்கு எனது எதிர்காலம்" ஒரு வாக்கின் வலிமை என்பதை வலியுறுத்தி வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வுப் போட்டிகள் நடைபெறுகிறது. வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் போட்டியின் அட்டையை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவராசு வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது

தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் விழிப்புணர்வுக்காக வினாடி வினா, பாட்டு போட்டி, விளம்பர போட்டி, வீடியோ போட்டி என 5 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சிறந்த வீடியோ திரைப்படத்திற்க்கு முதல் பரிசு இரண்டு லட்சம். தொழில் சார்ந்த வகையில் 50 ஆயிரம், தொழில் சாராத வகையில் 30 லட்சம். பாட்டுப் போட்டியில் சிறந்த முதல் பரிசு ஒரு லட்சம் முதல் 50 ஆயிரம், 20 ஆயிரம் கொடுக்கபடுகிறது. விளம்பர வடிவமைப்பு ரூ.50,000 மற்றும் ரூ.30,000 பரிசு வழங்கப்படுகிறது.

தேர்தலின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மேலும் இதனை ஊக்குவிப்பதற்கு பரிசுத்தொகை வழங்குகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யபட்டுள்ளனர். 1,262 வாக்கு சாவடியில் 4 வாக்கு சாவடிகள் குறைந்து 1,258 வாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி மாலை 6 மணியோடு இறுதி பிரச்சாரம் முடிவடைகிறது. ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 14 பேரூராட்சி என 20 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது உள்ளது. 151 வாக்கு மையங்களில் பதட்டமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

1,258 வாக்கு மையங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. பதட்டமான 151 வாக்குச்சாவடி மையங்களில் 47 இடங்களில் மத்திய அரசின் தேர்தல் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 151 வாக்குச்சாவடி மையங்களில் சி.சி.டி.வி. மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய அனைவருக்கும், தேர்தல் பார்வையாளர்கள், காவல்துறை ஆகிய மூன்று துறையினருக்கும் தபால் வாக்கு பதிவு கொடுக்கப்படுகிறது. 2,100 தபால் வாக்குகள் விண்ணப்பம் வந்துள்ளது.

15.02.2022 மாலை 5.45 மணி வரை தபால் வாக்குகள் முடிவடைகிறது. இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டதாக இதுவரை புகார் வரவில்லை. முகக்கவசம் அணியாதவர்களிடம் வாரம், வாரம் மூன்று லட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கிறோம். பிரச்சாரத்தின் போது முகக்கவசம் அணிய வில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

Updated On: 14 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை