/* */

ஸ்ரீரங்கம் மேலூரில் ஆழ்துளை கிணறு அமைக்க மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு

ஸ்ரீரங்கம் மேலூரில் ஆழ்துளை கிணறு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரி உள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் மேலூரில் ஆழ்துளை கிணறு அமைக்க மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பு
X

வக்கீல் கிஷோர் குமார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தென் மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் எஸ்.ஆர். கிஷோர்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மேலூர் செட்டி தோப்பு, பண்ணைதோப்புயொட்டிய பகுதிகளின் திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆழ்த்துளை கிணறுகளை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் தங்களது நிலத்தடி நீர் ஆதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று மேலூர் பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் மேற்படி ஆழ்த்துளை கிணற்றால் நாள்தோறும் உறிஞ்சப்படும் கோடிக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீருக்கு பதிலாக அதே அளவு நிலத்தடி நீரை சேமிக்கும் மாற்று திட்டம் எதுவும் திருச்சி மாவட்ட நிர்வாகம் வகுத்ததாக இதுவரை தெரியவில்லை. எனவே பொதுமக்களின் அச்சத்திற்கு நியாயம் இருப்பதாகவே மக்கள் நீதி மய்யம் கட்சி கருதுகிறது. எனவே மேலூர் பகுதி பொதுமக்களின் நியாயமான இந்த கோரிக்கைக்கு மக்கள் நீதி மய்யம் தார்மீக ரீதியாக என்றும் மக்களுடன் துணை நிற்கும் என இந்த நேரத்தில் உறுதியளிக்கிறோம்.

எனவே திருச்சி மாவட்ட ஆட்சியரும், ஸ்ரீரங்கம் சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேற்படி மேலூர் செட்டிதோப்பு மற்றும் பண்ணை தோப்பு பகுதிகளில் அரசு சார்பில் ஏற்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு தொடர்பாக பொதுமக்களின் நியாயமான அச்சத்தை மற்றும் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக உடனடியாக பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 9 March 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!