மணப்பாறை அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
மணப்பாறை அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
X

மணப்பாறை அருகே தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலை அருகே உள்ள எஸ்.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தர ராஜா பெருமாள் (வயது 55). தொழிலதிபரான இவர் புத்தானத்தம் பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று அவருக்கு திருமண நாள் ஆகும். இதையடுத்து அதனை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தினருடன் மைசூர் சென்று விட்டார்.

இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக அங்கு வேலை செய்யும் பெண் சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த அறையின் கதவுகளில் இருந்து பூட்டுகளும் உடைந்த நிலையில் கீழே கிடந்தன. அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் புத்தாநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு முன்கூட்டியே அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். விரல் ரேகையையும் பதிவு செய்தனர்.

இதேபோல் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள தோப்பில் சென்று நின்றது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மைசூர் சென்றவர்கள் வந்த பின்னரே கொள்ளை போன நகை, பணம் குறித்த முழு விபரம் தெரிய வரும்.

Updated On: 26 May 2023 1:47 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    elakkai benefits in tamil அடேங்கப்பா..... ஏலக்காயில் இவ்வளவு ...
  2. சினிமா
    லியோ பர்ஸ்ட் லுக் விரைவில்! அறிவிப்பு எப்ப வருது தெரியுமா?
  3. உலகம்
    அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கலந்துரையாடிய ராகுல்காந்தி
  4. தமிழ்நாடு
    பத்திரிகையாளர்கள் விலை கொடுத்து வாங்கிய வீட்டு மனைப்பாட்ட ரத்து: பாமக...
  5. சிவகாசி
    சிவகாசி அருகே பூட்டிக் கிடந்த பட்டாசு ஆலையில் இடி, மின்னல் தாக்கி தீ...
  6. மொடக்குறிச்சி
    ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்:...
  7. இந்தியா
    தோனியின் ரீயாக்‌ஷன் நேரத்துடன் ஒப்பீடு.. மும்பை போலீசாரின் பதிவு
  8. இராஜபாளையம்
    திருவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸாருக்கு மிரட்டல் விடுத்த...
  9. திருப்பூர்
    ஜூன் மாதம், நூல் விலையில் மாற்றமில்லை; பனியன் உற்பத்தியாளர்கள்
  10. தமிழ்நாடு
    புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 50 மாணவர்கள்...