/* */

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த போலி சாமியார் கைது

விளாத்திகுளத்தில் பரிகார பூஜை செய்வதாக கூறி, பெண்ணிடம் நகை,பணத்தை பறித்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் நகை, பணம் பறித்த போலி சாமியார் கைது
X

விளாத்திகுளத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போலி சாமியார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சக்தி (37) என்பவர் விளாத்திக்குளம் - நாகலாபுரம் சாலையில் 'சக்தி வாராகி" என்ற பெயரில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார்.

காவி உடையணிந்து பல வித பூஜைகள் நடத்தி, வட்ட வடிவில் கோடுகள் போட்அதற்கு மத்தியில் பெரிய அண்டாவில் தண்ணீர் வைத்து அதில் அமர்ந்து கொண்டு தியானம் செய்வது வழக்கம். இதுபோல பல வினோத செயல்கள் செய்து பொதுமக்கள் மத்தியல் தன்னை சக்தி வாய்ந்த ஒரு சாமியார் போல காண்பித்துக் கொண்டுார்.

இவர் ஜோதிடம் மற்றும் குறி பார்க்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரை சக்தி வாய்ந்த சாமியார் என்று நினைத்து, இவரிடம் குறி கேட்டு தன்னுடைய குடும்பப் பிரச்சனைகளை பரிகாரம் செய்து தீர்த்துக் கொள்ளலாம் என்று பலர் வருகின்றனர்.

இது போல விளாத்திக்குளம் கரிசல்குளத்தினை சேர்ந்த சக்திவேல் என்பவரது மனைவி தங்கபேச்சியம்மாள் (52). விபத்தில் இவர் கணவர் இறந்து விட்டார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சக்தியின் ஜோதிட நிலையம் சென்று குறி கேட்டுள்ளார். அப்போது சக்தி அந்தப் பெண்ணிடம், இறந்த போன உன் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை என கூறியுள்ளார்.

உனது வீட்டை இடித்து மாற்றியமைத்தால்தான் உன் கணவர் ஆத்மா சாந்தியடையும், உனது குடும்பப் பிரச்சனை தீரும் என்றும் குறி சொன்னார்.

அதற்கு அப்பெண் தன்னிடம் பணம் இல்லை என்று கூற, இந்த போலி சாமியார் அந்தப் பெண்ணிடமிருந்து 2½ பவுன் தங்கச் செயினை பெற்றுக் கொண்டு ரூ.30ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்கச்சொல்லி உள்ளார்.

அந்தப் பெண்ணும் அவர் கூறியவாறே வீட்டை இடித்துள்ளார். அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

அப்போது அவர் இந்தப் பெண்ணிடம் உனது தாலி, மோதிரம் ஆகியவற்றை உருக்கி தங்கமாகவும், பணம் ரூபாய் 3500ம் கொண்டு வா, அதில் நான் தாயத்து செய்து, அதை பூஜையில் வைத்து தருகிறேன் அத்துடன் உனது பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அந்தப் பெண்ணும் 7 கிராம் தங்கத்தை உருக்கி அவரிடம் தங்கம் மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் இதுவரை தாயத்தும் கொடுக்கவில்லை, அந்த 7 கிராம் தங்கம் மற்றும் பணத்தையும் திருப்பியும் கொடுக்கவில்லை.

அதைக் கேட்ட அந்தப் பெண்ணிடம், உனக்கு செய்வினை வைத்து கை, கால்களை விளங்காமல் செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளரை உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் விளாத்திக்குளம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி போலி சாமியார் சக்தி என்பவரை கைது செய்தனர்.

மேலும் இது போன்று எத்தனை பேரை மோசடி செய்துள்ளார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சக்தி ஏற்கனே இது போன்று பெண் பிரச்சினையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. விபரம் அறியாத பெண்களை ஜோதிடம் என்ற பெயரில் ஏமாற்றுவது, பெண்களை வசியம் செய்து தருகிறேன் என்று கூறி இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரிடம் பணத்தினை கறந்துள்ளார்.

ஆனால் வெளியே சொன்னால் தங்களுக்கு அசிங்கம் என்று நினைத்து பலரும் புகார் கொடுக்க முன்வரவில்லை என்கின்றனர் போலீசார்

இதுபோன்று போலி சாமியார்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், போலி சாமியார் சக்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் கொடுக்க முன் வர வேண்டும்,

புகார் கொடுத்தால் போலீசார் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 Sep 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...