/* */

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை...
X

தூத்துக்குடி நீதிமன்றம். (கோப்பு படம்).

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள நீராவிபட்டி பகுதியைச் சேர்ந்த கவுண்டமணி மகன் அழகுராஜ் (வயது 30). இவர், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்தனர். மேலும், விசாரணை மேற்கொண்டு அழகுராஜை கைது செய்தனர். இந்த வழக்கு தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த அப்போதைய விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமி புலன் விசாரணை மேற்கொண்டு கடந்த 06.07.2016 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி மாவ ராமனுஜம் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அழகுராஜிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 3,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இதைத்தொடர்ந்து, அழகுராஜ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுப்புலெட்சுமியையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் சங்கீதா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Updated On: 2 Dec 2022 4:50 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  4. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  5. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  6. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  7. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  8. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  9. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!