/* */

தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. க்ரைம் செய்திகள்…

தூத்துக்குடி அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 61 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. க்ரைம் செய்திகள்…
X

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த சில க்ரைம் செய்திகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம்:

61 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்:

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தெற்கு ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு குடோன் முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் கொற்கை மணலூர் பகுதியை சேர்ந்த ஜெயமுருகன் (வயது 41), மாரிமுத்து (39), பொன்ராஜ் (35) மற்றும் ஏரல் முதலியார் தெருவைச் சேர்ந்த கணேசன் (46) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் ஒரு குடோனில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே தனிப்படை போலீஸார் ஜெயமுருகன், மாரிமுத்து, பொன்ராஜ் மற்றும் கணேசன் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூபாய் 1,08,200 மதிப்புள்ள 61 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ரொக்க பணம் ரூபாய் 53,200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது:

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையிலான போலீஸார் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோமதிபாய்காலனி தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி பகுதியைச் சேர்ந்த சேர்மத்துரை (24) என்பதும், அவர் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

உடனே, தனிப்படை போலீஸார் சேர்மத்துரையை கைது செய்து, அவரிடம் இருந்த 70 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது:

குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரும்பூர் அழகப்பாபுரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (50) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 25.12.2022 அன்று மாரியப்பன் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முத்துக்குமார், மாரியப்பனிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து மாரியப்பன் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட முத்துக்குமார் மீது ஏற்கெனவே சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 3 வழக்குகளும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 3 வழக்குகளும், வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 11 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

ஆத்தூரில் 2 ரௌடிகள் கைது:

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி, திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில், ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் போலீஸா ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், அவர்கள் ஆத்தூர் பேட்டை தெருவை சேர்ந்த செந்தில்குமார் (41) மற்றும் கொழுவைநல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சங்கரவேல் (42) என்பதும், அவர்கள் அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் செந்தில்குமார் மற்றும் சங்கரவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார் மீது ஏற்கெனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 14 வழக்குகளும், சங்கரவேல் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 7 வழக்குகளும் உள்ளது தெரியவந்தது.

Updated On: 27 Dec 2022 4:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  8. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  9. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  10. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!