/* */

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை பெறுவோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை பெறுவோர் தங்களது ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித் தொகை பெறுவோர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: ஆட்சியர் தகவல்…
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நல வாழ்விற்காக கடந்த 2010 ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை தொடங்கப்பட்டது. அந்த துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் துறை தொடங்கப்பட்டபோது மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவி தொகையை மாதம் ரூ. 2000 வழங்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் 2,06,254 பேர் பயனடைந்து வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவி தொகை பெறுவோர் தங்களது ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருவமாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் சுமார் 6,554 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் ரூ. 2000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தபட்டு வருகிறது. தற்போது பராமரிப்பு உதவித் தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகளின் முழு விபரம் டிஜிட்டல் மயமாக்கப்படு வருகிறது.

எனவே, ரூ.2000 பெறும் மனவளர்ச்சி குன்றியோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஆதார் எண், தேசிய அடையாள அட்டை மற்றும் வங்கி புத்தக நகல் விவரங்களை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக் வேண்டும் என ஆட்சியர் செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 29 Dec 2022 1:16 PM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்