/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.55 லட்சம் வாக்காளர்கள்: புதிதாக சேருவோர் விண்ணப்பிக்கலாம்..

Thoothukudi News Today -தூத்துக்குடி மாவட்டத்தில் 14.55 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாக வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.55 லட்சம் வாக்காளர்கள்: புதிதாக சேருவோர் விண்ணப்பிக்கலாம்..
X

வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டார்.

Thoothukudi News Today -தூத்துக்குடி மாவட்டத்தில் 1.1.2023 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணியின் அடிப்படையில், தூத்துக்குடி, விளாத்திக்குளம், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் (தனி), திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியர் செந்தில்ராஜ் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரைவு வாக்காளர் பட்டியலின்படி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் 104416 ஆண் வாக்காளர்களும், 108932 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 213364 வாக்காளர்கள் உள்ளனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 136456 ஆண் வாக்காளர்களும்;, 142435 பெண் வாக்காளர்களும், 70 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 278961 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் 116446 ஆண் வாக்காளர்களும், 123500 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 239975 வாக்காளர்கள் உள்ளனர். ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் 110032 ஆண் வாக்காளர்களும், 113544 பெண் வாக்காளர்களும், 4 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 223580 வாக்காளர்கள் உள்ளனர்.

ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 119562 ஆண் வாக்காளர்களும், 124966 பெண் வாக்காளர்களும், 48 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 244576 வாக்காளர்கள் உள்ளனர். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் 124776 ஆண் வாக்காளர்களும், 130708 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 255513 வாக்காளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 711688 ஆண் வாக்காளர்களும், 744085 பெண் வாக்காளர்களும், 196 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 14 லட்சத்து 55 ஆயிரத்து 969 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியில் 9.11.2022 முதல் 8.12.2022 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கு விண்ணப்ப படிவங்களை வாக்காளர்கள் அவர்களுக்குரிய வாக்குச்சாவடிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் அளிக்கலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1619 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களிடம் இருந்து மனுக்கள் பெற்றிடும் வகையில் நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு விடுமுறை நாள் தவிர்த்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் நேரில் விண்ணப்பங்களை அளித்திடலாம்.

17 வயது முடிவடைந்த நபர்களும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முன்னதாகவே விண்ணப்பிக்கலாம். இருப்பினும் 1.1.2023 ஆம் நாளன்று 18 வயது பூர்த்தியடைந்த (31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ பிறந்துள்ள) நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே சிறப்பு சுருக்கத் திருத்தக் காலத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மனு அளிக்க இயலாதவர்கள் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்கிற மெபைல் செயலி மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட விண்ணப்பங்கள் அளிக்கலாம். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வாக்காளர் விபரங்கள் சமர்ப்பித்து கருடா செயலி வாயிலாக பதிவேற்றம் செய்திடலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வரை 62 சதவீதம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர். ஆதார் இணைப்பு 100 சதவீதமாக மாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் அனைவரும் தங்களது பெயரை இணைத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Nov 2022 10:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!