/* */

காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

காலை உணவுத் திட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

காலை உணவுத் திட்டம்: தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
X

தூத்துக்குடியில் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார்.

தமிழக அரசு மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் 79 பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் தெற்கு புதுத்தெரு சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவு குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று ஆய்வு செய்தார்.


தொடர்ந்து, குழந்தைகளுக்கு அவர் காலை உணவு பரிமாறினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் 79 பள்ளிகளில் பயிலும் 5,580 குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள். இந்தத் திட்டம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


காலை உணவுத் திட்டத்தினால் பள்ளிகளுக்கு குழந்தைகளின் வருகை மற்றும் கற்றல் திறன் அதிகரித்து உள்ளது. மேலும், குழந்தைகள் ஈடுபாட்டுடன் கல்வி கற்பதற்கு வழிவகை ஏற்பட்டு உள்ளது. தமிழகம் அளவில் 1,978 பள்ளிகளில் 1,66,098 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சியில் 18 பள்ளிகளில் 2,636 குழந்தைகள், விளாத்திகுளம் ஒன்றியத்தில் 56 பள்ளிகளில் 2,350 குழந்தைகள், கோவில்பட்டி நகராட்சியில் 5 பள்ளிகளில் 594 குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

Updated On: 6 March 2023 8:59 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  2. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  4. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  7. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  9. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!