/* */

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

POCSO Act in Tamil -10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைதான தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
X

POCSO Act in Tamil -நமது நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடைபெறுவதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அனைத்துத் தரப்பில் இருந்தும் எழுந்தது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் என்ற போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த சட்டத்தின்படி, குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். மேலும், அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிமுறைகள் உள்ளது.

இதுதவிர, குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக பேசுவது, குழந்தைகளை பாலியல் ரீதியான புகைப்படங்கள், வீடியோ எடுப்பது போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க போக்சோ சட்டத்தில் இடம் உள்ளது. இந்த சட்டத்தின் படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வண்புணர்ச்சி செய்த வழக்கில் கைதான தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 25,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், கீழமங்கலம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் சுடலைமாடன் (57). தொழிலாளி. இவர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2020 ஆண்டு பாலியல் வண்புணர்ச்சி செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து சுடலைமாடன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கை கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள் புலன் விசாரணை செய்து கடந்த 29.2.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாமிநாதன் குற்றம் சாட்டப்பட் தொழிலாளி சுடலைமாடனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 25,000 அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாளுக்கும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமி மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர் ஜெபமேரி ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Nov 2022 4:51 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை