/* */

சிதம்பரநகர் மார்க்கெட்டில் கடைகள் அகற்றம்

தூத்துக்குடி சிதம்பரநகர் மார்க்கெட்டில் கடைகளை மாநகராட்சியினர் இடித்து அகற்றினர்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக சிதம்பர நகரில் உள்ள மார்க்கெட் கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஓட்டல், மீன் மற்றும் இறைச்சிகடை, மண்பானை கடை, என 60க்கும் மேற்பட்ட கடைகள் கடைகள் இயங்கி வந்தது.

இந்த இடத்தில் தற்போது மாநகராட்சி மூலம் புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் மார்க்கெட்டை காலிசெய்ய உத்தரவிட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் மேலும் அவசாகம் வழங்கி கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், மே 12 ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி உத்தரவிட்டிருந்தார்.

மாநகராட்சி அளித்த அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், இன்று மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் ஜேசிபி எந்திரம் மூலம் இடிக்கப்பட்டது. இதுபோல் தூத்துக்குடி வஉசி மார்க்கெட் கடைகளையும் காலி செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 13 May 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!