/* */

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது

தூத்துக்குடி மாநகராட்சி முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது
X

தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்.

தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தூய்மை பணியாளர்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார்.

போராட்டத்தில் முக்கிய கோரிக்கைகளாக பணி நிரந்தரத்திற்கு எதிரான அரசாணை 152-யை ரத்து செய்ய வேண்டும். தினக்கூலி தூய்மை பணியாளர்களையும் ஓட்டுநர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 2023-இல் ஓய்வு பெற்ற நிரந்தர பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை முழுமையாக உடனே வழங்க வேண்டும்.

தினக்கூலி மற்றும் கிராமப் பஞ்சாயத்து தொகுப்பூதிய தூய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் , கனரக வாகன ஓட்டுனர்கள், அனிமேட்டர் பணியாளர்கள், கொசு மருந்து மற்றும் அபேட் மருந்து பணியாளர்கள், பாதாளச்சாக்கடை மற்றும் பிட்டர் கூலி பணியாளர்களுக்கு அரசாணை 36(2D) படி ஊதியம் வழங்க வேண்டும்.

சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களின் இ.பி.எஃப், குளறுபடிகளை சரி செய்து இ.பி.எஃப், பணத்தை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் சிஐடியு நிர்வாகிகள் ராமமூர்த்தி, ரசல், சங்கரன், பேச்சிமுத்து மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 12 July 2023 1:16 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு