/* */

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை துவக்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த 29ம் கட்ட விசாரணை தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் இன்று துவங்கியது.

HIGHLIGHTS

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை துவக்கம்
X

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் ஹென்றி டிபேன்

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த ஆணைய அதிகாரி மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தார். அதன்படி ஏற்கனவே 28 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 1053 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் 813 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1127 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும் 1150 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளது, இதில் 1127 ஆவணங்கள் மனுதாரர் தரப்பிலும், காவல்துறை சார்பில் 23 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 29ஆம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் இன்று துவங்கியது. இதில் மனித உரிமை வழக்கறிஞர் ஹென்றி டிபேன் இன்று ஆஜராகினார், கடந்தாண்டு தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக சாட்சியம் அளித்த நிலையில் ஆணையம் குறுக்கு விசாரணை இன்று செய்ய உள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹென்றி டிபேன் கூறுகையில், குறுக்கு விசாரணைக்காக ஆணையம் முன்பாக ஆஜராக உள்ளேன். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக இன்னும் 400 பேரை விசாரணை செய்ய உள்ள நிலையில், ஆணையம் தங்களது விசாரணையை விரைந்து முடிவெடுக்க வேண்டும். ஆட்சியர், கண்காணிப்பாளர், துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்ட தாசில்தார்கள் விசாரிக்கப்படவில்லை. ஆணையத்தின் விசாரணையை கூடுதல் நாட்களாக நடத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்றார்.

Updated On: 23 Aug 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்