/* */

கோவில்பட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்

கோவில்பட்டி அருகே அரசு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கோவில்பட்டி அருகே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர் போராட்டம்
X

கோவில்பட்டியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குமாரபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 22 குழந்தைகள் பயின்று வருகின்றனர். குமாரபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும், நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்த 21 குழந்தைகள் என 22 பேர் பயின்று வருகின்றனர். கடந்த 9 ஆம் தேதி மழையின் காரணமாக பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

குமாரபுரம் பள்ளியில் நடு குமாரபுரம் மற்றும் வடக்கு குமாரபுரம் சேர்ந்த குழந்தைகள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும், மேலும் பள்ளிக்கு சென்றுவர போதுமான வசதி இல்லை என்றும், மெயின் ரோடு பகுதியில் வாகனங்கள் அதிகமாக செல்வதால் அந்தவழியாக குழந்தைகள் பாதுகாப்பான முறையில் செல்ல முடியாத நிலை இருப்பதாகவும், விவசாய நிலங்கள் வழியாக குழந்தைகள் சென்று வருகின்றனர். மழைக்காலத்தில் அந்தப் பாதை வழியாக செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும், சிலர் தங்களது நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து விடுவதால் பள்ளிக்கு குழந்தைகள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே பள்ளியை வடக்கு குமாரபுரத்திற்கு மாற்ற வேண்டும், அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தர வேண்டும் அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி கடந்த 9 ஆம் தேதி முதல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் தங்களது கோரிக்கை குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று அந்தப் பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் சென்று பள்ளியை முற்றுகையிட்டு தங்களது குழந்தைகளின் கல்வி மாற்றுச் சான்றிதழ் (TC) தர வலியுறுத்தி அங்குள்ள ஆசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுங்கள் இது குறித்து கல்வித்துறை மேல் அதிகாரிகளிடம் கேட்ட பின்னர் பள்ளி மாற்றுச் சான்றிதழை தருகிறேன் என ஆசிரியர் கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 24 Nov 2023 3:09 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!