/* */

கள்ளச்சந்தை ரெம்டெசிவிர் விற்பனை -குண்டாஸ் பாயும் எஸ்.பி ஜெயக்குமார்.

கள்ளச்சந்தையில வித்தா கம்பி எண்ணணும். பீகேர்புல்.

HIGHLIGHTS

கள்ளச்சந்தை ரெம்டெசிவிர் விற்பனை -குண்டாஸ் பாயும் எஸ்.பி ஜெயக்குமார்.
X

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தீன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்துவருவதை அடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மறுபுறம் கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பது அதிகரிக்க தொடங்கியுள்ளதுகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக ரெம்டெசிவிர் மருந்து மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டு நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இதனை கள்ளச்சந்தையில் சிலர் விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. ஆங்கங்கே கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருபவர்கள் கைது செய்யபட்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் மேட்டுகாளியம்மன் கோவில் தெரு பகுதியில் தனியார் காம்பளக்சில் செயல்பட்;டு வரும் மொத்து மருந்து விற்பனை கடை ஒன்றில் ரெம்டெசிவிர் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையெடுத்து கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் அனிதா, கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட கடையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரெம்டெசிவிர் மருந்து 46 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையெடுத்து கடையின் உரிமையாளர் காந்திநகரைச் சேர்ந்த கணேசன் (29), அவரது சகோதார் சண்முகம் (27) அவரது சகோதரர் கணேசன் இருவரையும் போலீசார் கைது செய்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை பறிமுதல் செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில் நெல்லை, மதுரையில் ரூ16 ஆயிர ரூபாய்க்கு ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி வந்து 20 ஆயிர ரூபாய்; முதல் 30 ஆயிர ரூபாய் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது, மதுரை, நெல்லையில் யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும், இதன் பின்னால் இருக்கும் கும்பல் குறித்தும் போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை பாராட்டினர். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கோவில்பட்டியில் கள்ளத்தனமாக விற்பனை செய்யபடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான தனிப்படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது மேட்டுகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்த போது 46 ரெம்டெசிவிர் குப்பிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அரசு மருத்துவமனை மூலமாக தான் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தனியர் மருந்தகத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளனர். கோவில்பட்டி காந்தி நகர் அடுத்துள்ள நேரு நகரைச்சேர்ந்த கணேசன், அவரது சகோதார் சண்முகம் ஆகிய 2பேர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை, மதுரையில் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர்.

சம்பந்தபட்ட காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அங்கேயும் ரெம்டெசிவிர் மருந்து கைப்பற்றபட்டுள்ளது. தொடர் சங்கிலி போன்று ஆங்கங்கே விற்பனை செய்துள்ளனர். ரூ20 ஆயிரம் வரை ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்துள்ளனர். ரெம்டெசிவிர் மருந்து அரசு மருத்துவமனையில் தான் கிடைக்கும், இதனை கள்ளத்தனமாக விற்பனை செய்தால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள், கைது செய்யப்பட்டுள்ள இருவரும் யார்,யாருக்கு ரெம்டெசிவிர் மருந்தினை விற்பனை செய்துள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி விபரங்களை சேகரித்து வருகிறோம்,

இது உயிர்காக்கும் மருந்து அரசு தான் விற்பனை செய்ய வேண்டும், யார்,யாருக்கு எவ்வளவு விற்பனை செய்துள்ளனர் என்பது குறித்து அவர்களின் வங்கி கணக்கு விபரங்களையும் சேகரித்து வருகிறோம், அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Updated On: 18 May 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்