/* */

சிறுமியை மீட்டு தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை மனு அளிப்பு

திருவாரூர் அருகே காணாமல் போன 17 வயது சிறுமி கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

சிறுமியை மீட்டு தரக்கோரி உறவினர்கள் கோரிக்கை மனு அளிப்பு
X

சிறுமியைக்காணவில்லையென திருவாரூர் மாவட்ட எஸ்பி.யிடம் புகார் மனு அளிக்க வந்த உறவினர்கள்

திருவாரூர் அருகே அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தந்தை,தாய் இழந்ததன் காரணமாக தனது தாத்தா ராமமூர்த்தி மற்றும் பாட்டி லட்சுமி ஆகியோருடன் வசித்து வருகிறார். .தற்போது கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி கல்லூரிக்கு சென்ற அவர் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லையாம்.

இதுகுறித்து தகவலறிந்த ராமமூர்த்தி குடும்பத்தினர் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் தேதி புகார் அளித்துள்ளனர். சிறுமி பயின்ற கல்லூரியில் கும்பகோணத்திலுள்ள ஹோட்டலுக்கு பயிற்சிக்காக அனுப்புவது வழக்கம். சிறுமி மாயமான அன்றைய தேதி முதல் ஹோட்டலில் பணிபுரிந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுவனும் மாயமாகியுள்ளார். இச்சம்பவம் சிறுமி காணாமல் போனதற்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தை சிறுமியின் குடும்பத்தினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

தற்பொழுது புகார் அளித்து ஒரு வாரம் ஆகியும் எந்த ஒரு தகவலும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு புகார் மனு அளிக்க குடும்பத்தினர் வந்தனர் தங்கள் பேத்தியை கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் உறவினர்கள் கேட்டுக்கொண்டனர்.

Updated On: 8 Feb 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...