/* */

திருத்துறைப்பூண்டி வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

திருத்துறைப்பூண்டி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இன்று செய்தார்.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டி வளர்ச்சி திட்ட  பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X

திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

தமிழக அரசால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கச்சனம் பகுதியில் ரூ.17.85 லட்சம் மதிப்பீட்டில் கச்சனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட பணிகள் முடிவடைந்ததையும், பூசலாங்குடி பகுதியில் ரூ.121.89 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சாலை அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து விளக்குடி ஊராட்சியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.12.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் உள்ளிட்ட வளர்ச்சித்திட்டப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வளர்ச்சி திட்ட ஆய்வு பணியின்போது திட்ட இயக்குநர் தெய்வநாயகி, ஊரக வளர்ச்சித்துறையின் செயற்பொறியாளர் குமார், திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா, வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை