/* */

மன்னார்குடி அருகே இடிதாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவி

மன்னார்குடி அருகே இடிதாக்கி உயிரிழந்த கூலிதொழிலாளி குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் நிவாரணம் வழங்கினார்.

HIGHLIGHTS

மன்னார்குடி அருகே இடிதாக்கி இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவி
X
மன்னார்குடி அருகே இடி தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் நிவாரண உதவி வழங்கினார்.

டெல்டா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மழை பெய்துள்ளது. அதன் ஒருபகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் இளம் நடவு பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் கோட்டுர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கெழுவத்தூர் , பெருவிடைமருதூர் , மானாங்காத்த கோட்டகம் ,பெருகவாழ்ந்தான் , கர்ணாவூர் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா தாளடி பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளன.

இந்த நெற்பயிர்களை அ.தி.மு.க முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வயலில் இறங்கி அழுகிய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளைகேட்டு அறிந்தார். அதனை தொடர்ந்து பாலையூர் கிராமத்தில் சிலதினங்களுக்கு முன்பாக வயலில் விவசாய பணி மேற்கொண்டிருந்தபோது இடிதாக்கி சம்ப இடத்திலேயே உயிரிழந்த கூலிதொழிலாளி குமார் குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து ரூ 10000 நிவாரணமாக வழங்கினார் .

இதில் மன்னார்குடி நகர செயலாளர் ஆர்.ஜி.குமாா் , அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சிவா ராஜாமாணிக்கம் , கோட்டுர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜாசேட் , கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம் , துணைசெயலாளர் ஏங்கல்ஸ் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர் .

Updated On: 13 Nov 2021 5:43 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்