/* */

8 வயது முதல் 13 வயது குழந்தைகளுக்கு இலவச பயிற்சி..!

8 வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான இலவச ஒரு வாரகால பயிற்சி நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

8 வயது முதல் 13 வயது குழந்தைகளுக்கு இலவச பயிற்சி..!
X

இடம்: ஆதி சித்தர் குருகுலம் கவுன்சில்

T.கல்லுப்பட்டி

நாள்: 1.5.2024 புதன் காலை 9 மணி முதல்

7.5.2024 செவ்வாய் மாலை 5 மணி வரை

பயிற்சி விபரங்கள்: 7 இரவு 7 பகல் குருகுலத்தில் தங்கி குழந்தைகள் பெறப்போகும் பயிற்சிகள்:

மாதா, பிதா, குரு, தெய்வம் பற்றிய விளக்கங்கள்.

அடிப்படை மூலிகை கல்வி.

இரவு 7 முதல் 8 மணிக்கு இரவு உணவு. 9 மணிக்கு தூக்கம்.

மூலிகைகள் நடுதல்

மூலிகை நேர்காணல்

முகப்பரு, பசியின்மை, தலைவலி, அடுக்கு தும்மல், ஞாபக மறதி இவைகளுக்கான மூலிகை பிரயோக வழிமுறை.

வயலில் இறங்கி விதை நடுதல்.

நவதானியம் முளைக்க வைத்தல்(முளைப்பாறி)

கண்களை கட்டிக் கொண்டு புத்தகம் படித்தல்.

தாயின் அருமையை உணர பிரசவித்த தாயையும் சிசுவையும் மருத்துவ மனையில் நேர்காணல்.

தந்தைமார்கள் படும் கஷ்டத்தை உணர வைத்தல்.

ஒலைச்சுவடிகள் படித்தல்.

பிஸ்கட், பாக்கெட் நொருக்குத்தீனியினால் உருவாகும் வயிற்றுப்பூச்சியை மைக்ராஸ்கோப் மூலம் நேரடியாக பார்க்கும் பயிற்சி.

தேன்கூடு, குளவிக்கூடு, மண்புழு நேர்காணல்.

கோழி முட்டை அடை வைத்தல்

மரம் ஏறுதல்

மலை ஏறுதல்


பருத்தி பஞ்சிலிருந்து தக்கிலி மூலம் நூல் திரித்தல்

உணவு சாப்பிட பூவரசு இலையில் சாப்பாட்டு இலை தைத்தல்

விறகு அடுப்பில் கூட்டாஞ்சோறு சமைத்தல்.

சிறு தானியங்களில் நொறுக்கு தீனி செய்து சாப்பிடுதல்.

வேப்பங்குச்சியில் பல் துலக்குதல்.

சோப் இல்லாத முறையில் மண் சோப் குளியல்.

உவர்மண் பயன்படுத்தி துணி துவைத்தல்.

எளிய தியானம்,

எளிய யோகக்கலை,

பல்லாங்குழி விளையாட்டு & அதன் சூட்சும கணக்கை கற்றல்.

இரவு நேர வான்வெளியில் நட்சத்திரக்கூட்டங்களின் வடிவம், பெயர்களை தொலை நோக்கி மூலம் நேரடியாக கண்டறிதல்.

அரண்மணை, மற்றும் ஜமீன் பங்களாக்களை சுற்றி பார்த்தல் & ஆய்வு செய்தல்.

புதிர் விளையாட்டுகள்.

துணி ஓவியம், குகை ஓவியம் வரைதல்

மரப்பொருள்கள் மற்றும் கைவினை பொருட்கள் செய்தல்

குதிரை சவாரி

நாட்டு பசுமாடு பராமரிப்பு

மர வேலைகள் .

தற்காப்பு கலைகள்.

தற்சார்ப்பு வாழ்வியல் கலைகள்.

காவல்துறையினர் மூலம் பாலியல் குற்றம் பற்றிய சட்ட விழிப்புணர்வு கற்றல்.

இந்த பயிற்சியை பாரம்பரிய சித்த வைத்தியர்கள், வழக்கறிஞர்கள்,ஓய்வு பெற்ற IAS அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வழங்குவார்கள்.

பயிற்சியின் கட்டுப்பாடு: ஒரு வார கால பயிற்சி காலங்களில்

செல் போன், மற்றும் டி.வி பார்க்க அனுமதி இல்லை. குருகுலத்தில் இயற்கை உணவு, மூலிகை சூப், தங்குமிடம், பயிற்சி அனைத்தும் இலவசமாக தரப்படும். பெற்றோர்களின் அருமையை உணர வைக்க குழந்தைகளிடம் ஒருவார காலத்துக்கு தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளக்கூடாது.

பங்கேற்ற குழந்தைகளுக்கு ஆதி சித்தர் குருகுலம் கவுன்சில் பங்கேற்பாளர் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படும். முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். அனுமதிபெற தொடர்பு கொள்ள வேண்டியவர்: ஆசிரியர் மற்றும் தமிழ்மருத்துவர்

Dr.ப்ரியாராஜ், 9791396649, வருடம் முழுதும் பள்ளி விடுமுறைக்கு குழந்தைகளை ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் அழைத்து சென்றதால் கண்ட பலன் என்ன? இந்த பயிற்சி வாய்ப்பின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என ஆதி சித்தர் குருகுலம் கவுன்சில் குழந்தைகள் பயிற்சி குழுவினர் தெரிவித்தனர்.

Updated On: 12 March 2024 4:59 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  2. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  3. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  4. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  5. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  6. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  7. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  8. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்