/* */

சொகுசு விடுதிகளால் மனிதக் கழிவுகளின் மையமான சின்ன சுருளி அருவி

சின்ன சுருளி அருவி தொடர்ந்து சொகுசு விடுதிகளால் மனிதக் கழிவுகளின் மையமாக பாழ்பட்டு கிடக்கிறது.

HIGHLIGHTS

சொகுசு விடுதிகளால் மனிதக் கழிவுகளின்  மையமான சின்ன சுருளி அருவி
X

சின்னசுருளி அருவி.

தேனி மாவட்டத்தில் வருசநாடு பகுதியில் அமைந்திருக்கும் சின்னச் சுருளி அருவி பாரம்பரியம் மிக்க பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கில் பிரசித்தி பெற்றது சுருளி அருவி. மலையின் கிழக்கில் உள்ளதுஇந்த சின்னச் சுருளிஅருவி. கடந்த பத்து வருடங்களுக்கு உள்ளாகத்தான், இந்த சின்ன சுருளி அருவி தொடர்ந்து சொகுசு விடுதிகளால் பாழ்பட்டு கிடக்கிறது. மேகமலை பஞ்சாயத்து, குமணந்தொழு பஞ்சாயத்து, சிங்கராஜபுரம் பஞ்சாயத்து, பொன்னம் படுகை பஞ்சாயத்து என நான்கு பஞ்சாயத்துகளில் உள்ளடங்கி இருக்கும், கோரையூத்து, அரண்மனை புதூர், குமணந்தொழு, காமன் கல்லூர், மண்ணூத்து, புதுக்கோட்டை உள்ளிட்ட 18 கிராமங்களில் வாழும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது சின்னச் சுருளி அருவி.

மேகமலையில் சட்டவிரோதமாக சொகுசு விடுதிகள் அதிகரிக்க, அதிகரிக்க, விடுதிகளின் கழிவுகளை விடுவதற்கு இடமின்றி, சுருளி ஆற்றிலே விட்டு விடுகிறார்கள். இதில் மனித கழிவுகளும் அடங்கும். இந்த தண்ணீரைத்தான் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

விடுதிகளில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகளையும், திரவக் கழிவுகளையும் முறைப்படி வெளியேற்றுவதற்கான முகாந்திரம் எதுவுமற்ற நிலையில், சொகுசு விடுதிகளை கட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார் என்கிற கேள்வி எழுகிறது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்களில் பெறும் ஒரு பேப்பரை மையமாக வைத்து, இத்தனை அட்டூழியங்களையும் மேகமலையில் அரங்கேற்ற முடியும் என்றால், எத்தனை ஆண்டுகளுக்கு அந்த காடு தாங்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு, தேசிய புலிகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்ட நிலையில், எதற்காக மேகமலையில் தனியார்கள் நடத்தும் அத்துமீறலை வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை என்கிற ஆதங்கம் எழுகிறது.

பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறியப்படும் மேகமலையில், கான்கிரீட் கட்டிடங்களுக்கு என்ன வேலை இருந்து விட முடியும். நாடு முழுவதும் வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற முழக்கத்தை, நாட்டின் பிரதமரே தொடங்கி வைத்திருக்கும் நிலையில், வனத்துறை இன்னும் ஏன் பாராமுகமாக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நான்கு பஞ்சாயத்தின் தலைவர்கள், சொகுசு விடுதிகளின் மனித கழிவுகள் கலந்த சுருளி அருவி நீரை,எந்த அடிப்படையில் குடிநீராக கொடுக்கிறார்கள். எனவே தேனி மாவட்ட நிர்வாகமும், தேனி மாவட்ட வனத்துறையும், குடிநீர் வடிகால் வாரியமும், தமிழக பொதுப்பணித் துறையும், சுற்றுலா வளர்ச்சி கழகமும் இணைந்து, சின்ன சுருளி அருவியில் கலக்கும் சொகுசு விடுதிகளின் மனிதக் கழிவு கலந்த தண்ணீரை, மாற்றுவதற்கு வழி இல்லை என்றால், சம்பந்தப்பட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

அதுபோல அகற்றப்பட வேண்டிய தேயிலை கம்பெனி ஒன்று, மூன்று சொகுசு விடுதிகளை தங்கள் தேயிலை தோட்டத்துக்குள்ளேயே நடத்தி வருகிறது. அந்த மூன்று விடுதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிதாக முளைத்து கொண்டிருக்கும் மாஃபியாக்களையும் மேகமலையிலிருந்து விரட்டி அடிக்க வேண்டும். கட்டுமானத்திற்கு எவ்வித வேலையும் இல்லாத இடமாக ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் மாற்றப்பட வேண்டும். திறமையான, இளம் அதிகாரிகளை கொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம், இரும்பு கரம் கொண்டு, சட்டவிரோத சக்திகளை, மேகமலையிலிருந்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அப்புறப்படுத்துவதற்கு முன் வர வேண்டும்.

வனத்துறையின் தீவிர நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்.காட்சி கண்ணன், ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம், செயலாளர் தேவாரம் மகேந்திரன், பொருளாளர்பா.ராதா கணேசன், துணை தலைவர் கடமலை ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Oct 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை