/* */

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்

கஞ்சனூர் கோவில், மதுரை ஆதீனம் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜகவினருக்கும் செய்தியாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு உண்டானது.

HIGHLIGHTS

பிரதமரை சந்திக்கும் மதுரை ஆதீனம்! பட்டன பிரவேச சர்ச்சை விஸ்வரூபம்
X

கஞ்சனூருக்கு வருகை தந்த மதுரை ஆதீனம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே, மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூர் சுக்ரன் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுவாமி தரிசனத்திற்காக மதுரை ஆதீனம் நேற்றிரவு வந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு மிரட்டல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டார்.

விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றும் தெரிவித்த அவர், பட்டினப்பிரவேசம் பல்லாக்கு தொடர்பான கேள்விக்கு இந்தக் கேள்வி வேண்டாம் என்று கூறி, தவிர்த்தார். கஞ்சனூர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை பாக்கி உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு மதுரை ஆதினம் பதில் கூறுவதற்கு முன்பாக அங்கிருந்த பாஜகவை சேர்ந்தவர்கள் செய்தியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

இதன் காரணமாக, செய்தியாளர்களுக்கும் பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து செய்தியாளர்கள் மதுரை ஆதீனம் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் கஞ்சனூர் கோவிலில் பரபரப்பு நிலவியது. அங்கிருந்த சிலர் செய்தியாளர்களை சமாதானப்படுத்தி தர்ணாவிலிருந்து கலைந்து போக செய்துள்ளனர்.

Updated On: 5 May 2022 6:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்