/* */

பொங்கலுக்கு தரமற்ற பொருட்களை வழங்கிய முதலமைச்சர் பதவி விலகுவாரா: ஓ.பிஎஸ் கேள்வி

அதிமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சையில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்

HIGHLIGHTS

பொங்கலுக்கு தரமற்ற பொருட்களை வழங்கிய முதலமைச்சர்  பதவி விலகுவாரா: ஓ.பிஎஸ் கேள்வி
X

தஞ்சாவூரிஸ் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

பொங்கல் தொகுப்பு பையில், தரமற்ற பொருட்களை மக்களுக்கு வழங்கி உள்ளனர். மக்கள் வேதனையில் உள்ளனர். அதற்காக முதலமைச்சர் பதவி விலக தயாரா என தஞ்சையில் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை தனியார் மண்டபத்தில் பிரசார பொதுக்கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.

இதில் பேசிய பன்னீர்செல்வம், மக்களுக்கு தற்போது நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளதாகவும், எனவே நீங்கள் நீதிபதியாக இருந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும். தரம் சிறந்த ஆட்சி எது, தரம்தாழ்ந்த ஆட்சி எது என்று பார்த்து வாக்களிக்க வேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொன்னார்கள், ஆனால் இதுவரை செய்யவில்லை, கேட்டால் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது என்று கூறுகிறார்கள். 4 ஆண்டுகளில் நாமம் தான் போடுவார்கள் என அவர் தெரிவித்தார். அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் தேவை இல்லை, இன்னும் 2 ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வரும். மக்கள் விரோத ஆட்சி, வாக்குறுதியை நிறைவேற்றாத ஆட்சி. இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என அவர் தெரிவித்தார்.

நாங்களும் ஏழு ஆண்டுகள் பொங்கல் தொகுப்பு வழங்கினோம். எவ்வளவு தரமான பொருட்கள் வழங்கினோம். இந்தியாவிலேயே பண்டிகைக்காக எந்த ஒரு மாநிலமும், அனைத்து மக்களுக்கும் 2000 ரூபாய் கொடுத்தாக வரலாறு இல்லை. தமிழகம் மட்டுமே அதை நிறைவேற்றி உள்ளது. திமுக தொகுப்புத் திட்டத்தில் அடித்த ஊழல் சந்தி சிரிக்கிறது. அத்தனைப் பொருட்களும் தரமற்ற உள்ளது. தரமற்ற பொருட்களை வழங்கிய ஒரே கட்சி திமுக. பொங்கலுக்கு ரூ. 5,000 தரவேண்டும் என ஸ்டாலின் கூறினார்.

தற்போது ஒரு பைசாவைக்கூட ஏன் வழங்கவில்லை. ஒரு 500 ரூபாயாவது கொடுங்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் கூறுவது தற்போது அவர் காதில் விழாது. நிர்வாக திறமை இல்லாத ஆட்சி தற்போது நடக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் தொகுப்பு திட்டத்தில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக புகார் தெரிவித்திருந்தார். அதற்காக ஸ்டாலின் அமைத்த விசாரணை கமிஷன் பொருட்கள் அனைத்தும் தரமற்ற இருப்பதாக தெரிவித்தது. இதற்காக நீங்கள் ராஜினாமா செய்ய தயாரா. மக்களுடைய வரி பணம் வீணாகிவிட்டது. கமிஷனுக்காக, வெளிமாநிலங்களில் இருந்து பொருட்களை வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர். இந்த ஆட்சி அவலட்சனம் இதுதான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


Updated On: 11 Feb 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....