/* */

தாத்தா - அப்பா போல் உதயநிதி செயல்படுவார்: தஞ்சையில் கல்வி அமைச்சர் பேச்சு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ஆம் தேதி தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கஉள்ளார்

HIGHLIGHTS

தாத்தா - அப்பா போல்  உதயநிதி செயல்படுவார்: தஞ்சையில்  கல்வி அமைச்சர்   பேச்சு
X

 தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்

உதயநிதிக்கு எந்த பொறுப்பு வழங்கினாலும், அவரது தாத்தா, அப்பா போல் சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூபிப்பார் என தஞ்சையில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தஞ்சை சரபோஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு 75 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆட்சியில் முதல் முறையாக 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் நபார்டு வங்கி மூலம் நிதி பெறப்பட்டு மறுசீரமைப்பு செய்ய வேண்டிய கட்டிடங்கள் சீரமைப்பு செய்யப்படும். நேற்று சென்னை மாணவி தற்கொலை குறித்து கேட்தற்கு, ஏற்கனவே பல விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், சமுதாயத்தில் இதுபோல் தொடர்ந்து நடப்பது என்பது வேதனை அளிப்பதாகவும், மாணவிகளுக்கு அதிக அளவில் ஆலோசனை தேவைப்படுகிறது.

அரசு சார்பாக எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும், இது மாதிரி ஆங்காங்கே நடப்பது மனதிற்கு வேதனை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், உதயநிதி அமைச்சராக வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. அவரின் சேவை ஒரே தொகுதியுடன் முடங்கி விடக்கூடாது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டிற்கும் அவரின் சேவை தேவை என்ற ஆசையில்தான் அனைவரும் கூறுகிறார்கள். எந்த ஒரு பொறுப்பைக் கொடுத்தாலும் அவரின் தாத்தா, அப்பா போல் கண்டிப்பாக சிறப்பாக செயல்பட்டு தன்னை நிரூப்பிப்பார் என அவர் தெரிவித்தார்.

Updated On: 19 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!