/* */

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

அம்மாபேட்டை பேரூராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை  ஆய்வு செய்த ஆட்சியர்
X

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்டஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டைதேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்க இன்று (20.12.2023) நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18.12.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை தொடங்கி வைத்து அனைத்து மாவட்டங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இன்று தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் குள்ளங்கேணி சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும் பல்வேறு துறைகள் மூலம் பெற்று வரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின் படி” மக்களுடன் முதல்வர்” என்ற பெயரில் புதிதாக திட்டம் துவக்கப்பட்டு சிறப்பு முகாம்கள் 18.12.2023முதல் அனைத்து மாநகராட்சிகள். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலை 10. மணி முதல் பிற்பகல் 3. மணி வரை நடத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் எரிசக்தித்துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப் புறவளர்ச்சித் துறை, உள்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. சமூகநலத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் (ம) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை (மாவட்ட தொழிற் மையம்), தொழிலாளர் நலவாரியம், கூட்டுறவுத் துறை ஆகிய துறைகளில் கணினி மூலம் பதிவு செய்து தேவையான ஆவணங்கள் பெறுவதற்கு அதற்குரிய கட்டணம் செலுத்தி தொடர்புடைய துறை களிடமிருந்து பெற்றுக் கொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இதனைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பொது மக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Dec 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  2. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  3. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  5. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  6. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...