/* */

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை பொதுமக்களுக்கு தேவையான அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அசத்தி வருகிறது.

HIGHLIGHTS

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்
X

தஞ்சாவூரில் ஒரு ரேஷன் கடை ஊழியர், வாட்ஸ் அப் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தகவல்களை அனுப்பி அசத்தி வருகிறார்.

பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வளைதளத்தின் அசுர வளர்ச்சியால் அனைத்தும் நம் கைகளுக்குள் அடங்கிவிட்டது. இதில் சில எதிர்மறையான சில செயல்கள் நடந்தாலும், இதனை பலபேர் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வருவதும் தான் நாளுக்கு நாள் இதன் தேவைகள் அதிகரித்து வருகிறது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என எங்கிருந்தாலும் நம்மை இணைத்திருப்பது இதோ போன்ற சமூக வளைதளங்கள் தான்.

அது போல வாட்ஸ்அப்யை பயன்படுத்தி முன்னோடியாக விளங்குகிறது தஞ்சையில் உள்ள ஒரு நியாய விலை கடை. தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை பகுதியில் செயல்பட்டு வரும் AB002 என்கிற நியாயம் விலை கடையில் 1,350 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த குடும்ப அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களை இணைத்து "நமது அங்காடி" என்ற வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி, அதில் அன்றாடம் கடையில் உள்ள பொருள்களின் இருப்பு, நியாய விலை கடை செயல்படும் நேரம், அன்றைய தினம் எந்த குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் வழங்கபடவுள்ளது என அனைத்து தகவல்களையும் தெரிவிக்கிறார் கடையின் விற்பனையாளர் கணேசன்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த நியாய விலை கடையில் சுமார் 1,350 குடும்ப அட்டைகள் உள்ளது. அவர்கள் தினமும் வந்து கடையில் என்ன பொருள்கள் உள்ளது. இன்று என்ன பொருள்கள் வழங்குவீர்கள் என கேள்வி கேட்பதால், எங்களுடைய வேலையின் நேரமும் அதிகமாகிறது. மேலும் அனைவருக்கும் பதில் சொல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது.

இந்த தொற்று காலத்தில் கூட்டம் கூடுவதை தடுக்கும் விதமாக, வாட்ஸ் ஆப் குரூப்பை உருவாக்கி அதில் தினமும் அனைத்து தகவல்களையும் பதிவிடுதால் தற்போது பொதுமக்கள் கடைக்கு வருவது முற்றிலும் குறைந்துள்ளது.


இன்று எந்த குடும்ப அட்டைக்களுக்கு பொருள் வழங்ப்படுகிறதோ அவர்கள் மட்டும் வாங்கி செல்வதாகவும், இதனால் எங்களுக்கு வேலை சுமை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

தற்போது விடுமுறையும் சில நேரங்களில் மாற்றப்படுவதால் இது தெரியாமல் பொதுமக்கள் கடைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் தற்போது காலையில் தகவல் தருவதால் அவர்கள் அது பயன் உள்ளதாக இருக்கிறது.

மேலும் சில குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதிகளில் இல்லாமல், வேறு சில பகுதிகளில், வேறு மாவட்டங்களில் இருப்பதாலும், இங்கு இல்லாதவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாளில் பொருட்கள் வழங்குவது குறித்து தகவல் தெரிவிப்பதால், அவர்கள் அன்றைய தினம் மட்டும் வந்து வாங்கிச் செல்வது அவர்களுக்கு எளிதாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த வாட்ஸ் அப் குழு மூலம் எங்களுடைய வேலை சுமை குறைந்து உள்ளாகும், தேவையில்லாமல் நியாய விலை கடை வருவது தவிர்க்கப்படுகிறது.

எங்களுக்கு தேவையான பொருட்கள் இருப்பது எங்களுக்கு தெரிந்த பிறகே நாங்கள் கடைக்கு சென்று வாங்கி வருவதாகவும், இது மிகப்பெரிய வசதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதோ கடமைக்கு வந்து வேலை செய்து விட்டு செல்லும் ஊழியர்களுக்கு மத்தியில் ஒரு முன்னோடியாக செயல்படும் இந்த நியாய விலை கடை விற்பனையாளர் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 14 Jun 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  4. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  5. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  6. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  7. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  9. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  10. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை