/* */

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு பயணிகள், பொதுமக்களிடம் பிரசாரம்

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு தொழில் சங்கத்தினர் பயணிகள், பொது மக்களிடம் பிரசாரம்

HIGHLIGHTS

வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு  பயணிகள், பொதுமக்களிடம் பிரசாரம்
X

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு பயணிகள்- பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தனர்

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு பயணிகள்- பொதுமக்களிடம் பிரசாரம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற்றது

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வுதியர் நல கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் டிசம்பர் 4,5 தேதிகளில் தமிழ்நாடு அரசுக்கும் போக்குவரத்துக் கழக நிர்வாகங்களுக்கும் கோரிக்கை அளித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கோரிக்கைகளில் அரசு அழைத்து பேசித் தீர்வு காணப்படாததால் டிசம்பர் 19ஆம் தேதி அரசுக்கும், போக்குவரத்து நிர்வாகங்களுக்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் டிசம்பர் 27 ம் தேதி தொழிலாளர் ஆணையர் அரசு, நிர்வாகம், அனைத்து சங்ககளையும் அழைத்து பேசியதில் தீர்வு காணப்படவில்லை, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வருகிற ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டமைப்பு சார்பில் திட்டமிட்டபடி பயணிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கேட்டு பிரசாரம் இயக்கம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவையொட்டி இன்று 31.12.2023 காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்,தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து நிலையம், திருவையாறு பேருந்து நிலையங்கள் உள்ளிட்டு நான்கு இடங்களில் பிரசார இயக்கம் நடைபெற்றது.

இந்த பிரசாரத்தில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 முதல் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து பேரவை சங்கங்களும் ஒப்பந்த கோரிக்கை அளித்தும் அரசும்,கழக நிர்வாகங்களும் பேச்சுவார்த்தையை இது வரை துவக்க வில்லை. உடனடியாக 15வது சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தையை பேசி முடித்து புதிய சம்பளம் வழங்க வேண்டும், சுமார் 90 ஆயிரம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2015 ஜூலை முதல் 2023 வரை உயர்ந்துள்ள 102 மாத கால அகவிலைப்படி உயர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை.

ஓய்வூதிய விதிகளின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை உயர்ந்து வரும் அகவிலைப்படி உயர்வுகளை அறிவித்து, நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு பேசப்படும் ஊதிய ஒப்பந்த உயர்வின் பலன்கள் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள ஓட்டுனர்,நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர், அலுவலகப் பணியாளர், பாதுகாவலர், உணவக,துப்பரவு பணியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டும்.

கடந்த 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாரிசு பணியமனம் வழங்கவில்லை, அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப உடனடியாக வாரிசு பணி நியமனம் வழங்க வேண்டும், போக்குவரத்துக் கழகங்களுக்கு நாளுக்கு நாள் ஏற்படும் இடைவெளியை நிரப்பிட உரிய நிதியினை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தில் மேற்கொள்ளப்பட்டன. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பேசி தீர்க்க வேண்டும், இல்லை எனில் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்களும், பயணிகளும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒத்துழைப்பு தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்து பிரசாரம் நடைபெற்றது.

பிரசார இயக்கத்திற்கு சிஐடியூ மத்திய சங்க தலைவர் காரல் மார்க்ஸ், ஏ ஐ டி யூ சி மத்திய சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல்வன், ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் க.சரவணன் , ரிவா சங்க தலைவர் என்.பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். பிரச்சாரத்தில் ஏ ஐ டி யூ சி மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், தலைவர் என்.சேகர், அதிகாரிகள் நல சங்க நிர்வாகி ஜெ.சந்திரமோகன், பொறியாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ரவீந்திரன், என்.வீரமுத்து.

சி ஐ டி யூ நிர்வாகிகள் எஸ் . ராமசாமி,முருகானந்தம், ஐஎன்டியூசி நிர்வாகிகள் கென்னடி, குலோத்துங்கன், ரிவா சங்க நிர்வாகிகள் கண்ணன், ஜீவா, ஓய்வு பெற்றோர் சங்க நல்ல சங்க நிர்வாகிகள் ஏ.கணேசன், முருகானந்தம், ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க துணை தலைவர் டி.தங்கராசு, கண்காணிப்பாளர் சங்க நிர்வாகி எஸ்..பாலசுப்பிர மணியன்,அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணி முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிஐடியூ துணை பொது செயலாளர் ஜெ‌ வெங்கடேசன், செயலாளர் எஸ் .செங்குட்டுவன், ரிவா சங்க தலைவர் ஞானசேகரன் ஆகியோர் பங்கேற்றனர்


Updated On: 31 Dec 2023 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  6. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  8. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  9. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  10. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்