/* */

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம் நடவு

வீட்டுக்கு ஒரு மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம் நடவு
X

ஊருக்கு ஒரு வனம் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் (04.10.2022) மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது: வீட்டுக்கு ஒரு மரங்கள் வளர்க்கும் திட்டத்தின் உலக புவி தினத்தன்று துவங்கி வைத்து, இதுநாள் வரை கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 80000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியினை சம்பந்தப்பட்ட கல்லூரி பொறுப்பாளர்களும் தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக கொண்டுள்ளனர். இயற்கை நேசிக்கும் விதமாகவும் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட பசுமைக் குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் மரங்கள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினத்தன்று துவங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது இதுவரை சுமார் 80 ஆயிரம் மரக்கன்றுகள் பாதுகாக்கப்பட்ட இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றோம். இம்மாத இறுதியில் ஒரு லட்சம் ஆவது மரம் நடப்பட உள்ளது என்பது சிறப்புக்குரியதாகும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவினை அதிகப்படுத்தும் நோக்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தினை தொடர்ந்து ஊருக்கு ஒரு வனம் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மியாவாக்கி அடிப்படையில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்படுகிறது. இதில் ஆயிரம் சதுர அடியில் 200 முதல் 250 மரக்கன்றுகள் நடலாம். தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் பத்தாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஊராட்சிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் இன்னும் நாலு மாத காலத்தில் செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் சங்கர், கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், செயலாளர் ராம் மனோகர், இணைச் செயலாளர் பொறியாளர். முத்துக்குமார், வட்டார வளர்ச்சி ஜெயந்தி சதானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் சௌமியா ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற செயலாளர் சக்தி, இயக்க உறுப்பினர்கள் முனைவர் சுகுமாரன், செல்வராணி, தன்னார்வலர்கள் லத்தீப், ரவிக்குமார், கார்த்தி, பிரபாகரன், குரு பிரசாத், அருந்ததி, இளவரசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுயஉதவி குழு உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!