/* */

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்

சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்

HIGHLIGHTS

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்
X

சாலை விரிவாக்கப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

தஞ்சாவூா் மாவட்டம், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில், தஞ்சாவூா் - கறம்பக்குடி சீதாம்பாள்புரம் சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில், அண்ணா நகா் - நாஞ்சிக்கோட்டை புறவழிச்சாலை இடையே 2.50 கி.மீ தொலைவுடைய, தற்போதுள்ள இரு வழித்தட சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது.

இந்தப் பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை நகரை இணைக்கக்கூடிய சாலையாக நாஞ்சிக்கோட்டை சாலை அமைந்துள்ளது. இருவழி சாலையாக இருந்ததை 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்காத அளவுக்கு நடைபாதையுடன் கூடிய வடிகால் சாலையின் இருபுறமும் அமைக்கப்படுகிறது. இதற்காக ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. மேலும் 10 வீடுகள் பகுதியளவில் இடிக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். இந்த பணிகள் சுமார் ரூ. 8 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. பணிகள் அனைத்தும் 2 மாதத்துக்குள் முடிவடையும். ஆக்கிரமிப்புகள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவி கோட்ட பொறியாளர் ரேணுகோபால், உதவி பொறியாளர் மோகனா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Updated On: 5 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  4. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  8. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  9. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  10. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...