/* */

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அச்சுறுத்தல்: மாநில பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தமிழகத்தில் பொறுப்பேற்று ஒராண்டான நிலையில், திமுக தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

HIGHLIGHTS

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு  திமுக அச்சுறுத்தல்: மாநில பொதுச்செயலாளர்  எச்சரிக்கை
X

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அச்சுறுத்தலாம் என நினைத்தால், திமுக ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் எச்சரித்துள்ளார்..

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில பொதுச்செயலாளர் கருப்பு.முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசியதவது:

ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில், இரண்டாவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில், தமிழகத்தில் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பொறுப்பேற்று ஒராண்டான நிலையில், திமுக தேர்தலில் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால், அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்கள் சினிமா துறையை கைப்பற்றுவது, அரசு ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்வதற்கு, அரசு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிக்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் இல்லாத அளவிற்கு ஊழல் தலைவிரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 72 மணி நேரம் கெடு கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வருவதால், கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிச்சயம் கோட்டையை முற்றுகையிட்டு மிக பெரிய புரட்சியை ஏற்படுத்துவோம். அண்ணாமலை நடமாட முடியாது என அமைச்சர் பேசியுள்ளார்.

திமுகவில் இருப்பவர்கள் எல்லாம் ரவுடி தான், ரவுடிகளை வைத்துள்ளதால், அப்படி தான் பேசுவார்கள் என அண்ணாமாலை தெரிவித்துள்ளார். எங்கள் மாநில தலைவரை மிரட்டி, அச்சுறுத்தலாம் என திமுக நினைத்தால், தி.மு.க., ஓட்டுமொத்தமாக அழிக்கப்படும். மாநில தலைவரை மிரட்டிய அமைச்சர் பன்னீர்செல்வம், சட்டமன்ற அலுவலக முன்பு, அப்பகுதியில் உள்ள மக்கள் பிரச்னை, அப்பகுதியில் நடந்துள்ள ஊழல்களை வைத்து மிக பெரிய போராட்டம் நடத்தப்படும். அவரிடம் ஆள் பலம் இருக்கு, எங்களை நடமாட முடியாமல் செய்து விடலாம். ஆனால் நாங்கள் கடலுாரில் போராட்டம் நடத்துவோம், நடமாடுவோம் முடிந்தால் எங்களை அமைச்சர் பன்னீர்செல்வம் தடுத்து பார்க்கட்டும். மாநில தலைவர் மீது கை வைத்தால், தமிழகத்தில் அடுத்த என்ன நடக்கும் என சொல்ல விரும்பவில்லை. செய்து காட்டுவோம் இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 25 May 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  2. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  3. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  4. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  5. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  6. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  7. நாமக்கல்
    மணல் திருட்டிற்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
  8. நாமக்கல்
    ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
  9. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்