/* */

மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை காய்கறி ஆகிய மானாவாரி தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

HIGHLIGHTS

மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய-மாநில அரசுகள்  நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.செந்தில்குமார், ஆர்.பாரதி ஆகியோர் தலைமையில் செங்கிப்பட்டி கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மழை வெள்ளப் பாதிப்புக்கு மத்திய, மாநில அரசுகள் உடனே நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கடும் மழை வெள்ளப் பாதிப்புக்கு தமிழக அரசு கோரியுள்ள நிவாரண நிதியை உடனே ஒன்றிய அரசு வழங்க கோரியும், குறுவை அறுவடை செய்யும் நிலையில் மழை நீரில் மூழ்கி அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிடவும், நெல், நிலக்கடலை, கேழ்வரகு, மரவள்ளி, உளுந்து, வாழை, கரும்பு, காராமணி, வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் காய்கறி ஆகிய மானாவாரி தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு நிவாரணம்.

மழை வெள்ள பாதிப்பால் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் , மழை வெள்ள பாதிப்பு மற்றும் கோமாரி மர்ம நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போன கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் , வேலைவாய்ப்பு வருமானத்தை இழந்து உள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் நிவாரண வழங்கிடவும், பூதலூர் தாலுக்காவில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்து பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்காத விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

செங்கிப்பட்டி கடைவீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.செந்தில்குமார், ஆர்.பாரதி ஆகியோர் தலைமையில நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் இரா.இராமச்சந்திரன்,செங்கிப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் சு.லதா சுப்பிரமணியமன், நிர்வாகிகள் பாலு, ஜெ.முத்தமிழ்செல்வன், கே.ராஜேந்திரன், எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Updated On: 8 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  3. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  5. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  6. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்