/* */

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாடின்றி போதுமான அளவு இருப்பு உள்ளதாக இன்று 2 வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கலெக்டர் கோவிந்த ராவ் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தஞ்சையில் தடுப்பூசி 2வது தவணையை போட்டுக் கொண்ட கலெக்டர்
X

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார், பின்னர் அவர் அளித்த பேட்டியில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, தேவைக்கேற்ப பெறப்பட்டு வருகிறது.

இதை போல் தஞ்சை மாவட்டத்தில் பிராண வாயு ஆன ஆக்சிஜன் தட்டுப்பாடும் இல்லை, போதுமான அளவில் இருந்து வருகிறது. இதற்காக குழு அமைத்து கண்காணித்து வருவதாக தெரிவித்த அவர் தஞ்சை மாவட்டத்தில் கொரனோ பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்த அனுமதி பெற்றவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது அவ்வாறு வெளியே வந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாவட்டத்தில் மூன்று பேருக்கு மேல் ஒரே இடத்தில் பாதிப்பு இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இதுவரை 64 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கலெக்டர் கோவிந்தராவ்,

பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட தனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை இதுகுறித்து அச்சமின்றி பொதுமக்கள் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 23 April 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!