/* */

ஆழ்துளை கிணறுகள் கட்டுமானக் குழிகள்: பாதுகாப்பு எச்சரிக்கை நடவடிக்கை அவசியம்

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை தேவை

HIGHLIGHTS

ஆழ்துளை கிணறுகள் கட்டுமானக் குழிகள்: பாதுகாப்பு  எச்சரிக்கை நடவடிக்கை  அவசியம்
X

பைல் படம்

ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் கட்டுமானகுழிகள் அருகில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் வெளியிட்ட தகவல்:

மாவட்டங்களில் திறந்த வெளிகிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரிகுழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துவதுடன், சிலஉயிரிழப்புகள் நிகழவும் காரணமாக அமைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச்செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்.

அந்தவகையில் தஞ்சாவூர்மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகுழிகள், திறந்த வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் எளிதாக்க திறந்த வெளிகிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளின் இருப்பிடங்கள், பரிமாணங்கள் மற்றும் பிறதொடர்புடைய தகவல்களின் விரிவான பதிவை ஏற்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்டபகுதிகளில் சாத்தியமான அபாயங்களைக் குறைக்க, அனைத்து திறந்த வெளி கிணறுகளையும், செயலிழந்த ஆழ்துளைக்கிணறு களையும் திறம்பட பாதுகாப்பது அவசியம் குறித்தும், இவற்றால் ஆபத்துகள் ஏற்படாதவகையில் ஒவ்வொரு திறந்த கிணறுக்கும் போதுமான உயரத்தில் உறுதியான சுவர்கள் அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தல் மற்றும் இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தை களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விபத்துகளைத் தடுக்கும் வகையில் இவைகளைக் கண்டறிந்து உடனடியாக மூடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மேலும், கைவிடப்பட்ட குவாரி குழிகளால் ஏற்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதை தடுக்கும் வகையில் உடனடி நடவடிக்கையாக கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சுற்றி உடனடியாக பாதுகாப்பு வேலிகள் அமைக்க குவாரிகளின் குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோன்று சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைகளில், கட்டுமானக்குழிகள் மற்றும் அகழிகளை வலுவான தடுப்பு களை அமைத்திடவும், அவை ஓட்டுநர்களுக்கு நன்றாக தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட அபாயகரமான இடங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்டஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Aug 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...