/* */

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் தொடக்கம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் தொடக்கம்
X

தஞ்சை பெரிய காேவிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்தில் உள்ள 47 ஆலயங்களில் இன்று அன்னை தமிழில் அர்ச்சனை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றது. இதை பக்தர்கள் உற்சாகத்துடன் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோவிலில் தமிழ் முறைப்படி தான் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என கடந்த காலங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

கருவறையிலும் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு சமூக அமைப்புகளும் போராடி வந்த நிலையில், இன்று பெரிய கோவிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி அர்ச்சனை செய்யப்பட்டதை வரவேற்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் முறைப்படி அர்ச்சனையே விரைவாக விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 Aug 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  2. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  3. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  5. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  6. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  7. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  10. வீடியோ
    சிறைத்துறை அறிக்கை தவறானது ஆதாரம் காட்டும் வழக்கறிஞர் !#fake #report...