/* */

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வருகிற நாளை (டிச8 ) கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

HIGHLIGHTS

வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்
X

பைல் படம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான பணிகள் கடந்த மாதம் 9-ந் தேதி தொடங்கியது. தமிழகம் முழுவதும் அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 8-ந்தேதி வரை கால அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக கடந்த மாதம் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் வாக்கு சாவடி அமைக்கும் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய வருகிற 8-ந்தேதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்வதற்கு வருகிற 8-ந்தேதி கடைசி நாள் என்பதால் இன்னும் 3 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் வருகிற 26-ந்தேதிக்குள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் சென்னையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், மாவட்டங்களில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் டிசம்பர் 8-ந் தேதி கடைசி நாள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் போன்ற பணிகளுக்காக மட்டும் கடந்த 1-ந்தேதி வரை 18 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுதவிர பெயர் நீக்கம், தொகுதிக்குள் முகவரி மாற்றம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை உரிய படிவங்களை அளித்து மேற்கொள்ளலாம். வாக்காளர் பதிவு அலுவலரிடம் நேரடியாகவோ, தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகளிடமோ, இணையதளம், செயலி வாயிலாகவோ திருத்தம் மேற்கொள்ளலாம்.விண்ணப்பங்களை பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்க வருகிற ஜனவரி 3-ந் தேதி வரை தேர்தல் அலுவலர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் இணைய தளமான www.nvsp.in மூலம் வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து திருத்தங்களை செய்யலாம். அவை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 7 Dec 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...