/* */

சுரண்டையில் 2 நாளாக துள்ளி குதித்த புள்ளிமான் பிடிபட்டது!

சுரண்டையில் 2 நாளாக துள்ளி குதித்த  புள்ளிமான் பிடிபட்டது!
X

வெகுநேர ஆட்டத்திற்கு பிறகு பிடிபட்ட புள்ளிமான்

சுரண்டை, ஆலடிப்பட்டி, கீழச்சுரண்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக புள்ளிமான் ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

பகல் 12 மணியளவில் அந்த புள்ளிமான் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடம் அருகே உள்ள முட்புதரில் சென்றதை பார்த்த சிறுவர்கள் சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ்ஐ திருமலை ஆகியோர் விரைந்து வந்து புள்ளி மான் குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலை வேல் தலைமையிலான வீரர்கள் மானை மீட்க போராடினர். அப்போது துள்ளிக் குதித்த மான் அருகிலிருந்த வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் மானை லாவகமாக பிடித்து அதனை கயிற்றால் கட்டி தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி ஆலங்குளம் வனத்துறை ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றனர்.

பிடிபட்ட மானுக்கு சுமார் 5வயது இருக்கும், மேலும் அதன் பின்னங்காலில் பலத்த அடி பட்டிருந்தது. ஏற்கனவே மானூர் மற்றும் ஆலங்குளம் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான்கள் வீகேபுதூர், சுரண்டை ஆகிய பகுதிகளுக்கு வழிதவறி வருவதும் அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விடுவதும் வாடிக்கையாக உள்ளது. புள்ளிமானை பார்க்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 13 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை