/* */

குத்துக்கல்வலசை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

குத்துக்கல்வலசை ஊராட்சியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் பங்கேற்பு

HIGHLIGHTS

குத்துக்கல்வலசை ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை கிராம ஊராட்சியில்  நடந்த  சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் 

தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை கிராம ஊராட்சியில் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் பங்கேற்பு.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைகள் சார்பில் தேசிய அளவில் பஞ்சாயத்து ராஜ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக 24.04.2022 அன்று நீடித்த வளர்ச்சி இலக்குகள் (SDG) குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக் கப்பட்டு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

குத்துக்கல்வலசை ஊராட்சி தேவர் சமுதாய திருமண மண்டபத்தின் முன்பு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கீழ்க்கண்ட இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. வறுமையில்லா ஊராட்சி என்பது, யாரும் மீண்டும் வறுமை நிலைக்கு சறுக்கிவிடாத அளவிற்கு சமூக பாதுகாப்பு கொண்டிருக்க வேண்டும்.

அனைவருக்கும் மேம்பட்ட வாழ்ககை சூழல்,வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற நிலையை ஏற்படுத்தும் கிராம ஊராட்சியாக அமைத்தல், கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வயதினரும் உடல் நலத்துடன் நல வாழ்வு வாழ தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம ஊராட்சியாக அமைத்தல்.அனைத்து குழந்தைகளும், வாழவும், வளரவும், பங்கேற்கவும் தேவையான பாதுகாப்பு அளித்து வருவதன் மூலம் அவர்களின் முழு திறன்கள் வெளிவரும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்தல்.

அனைத்து வீடுகளிலும் பயன்படுத்த கூடிய நிலையில் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு தரமான குடிநீர் வழங்கும் நிலை, முறையான நீர் மேலாண்மை மற்றும் வேளாண்மை பணிகளுக்கு தேவையான நீரை அளித்து நீர் சார்ந்த சூழலை தொடர்ந்து பாதுகாத்தல்.

இயற்கையின் வளங்கள் மற்றும் பசுமையை நம்முடைய எதிர் கால சந்ததிகளுக்கு கொடுக்கும் வகையில் பாதுகாக்கவும், மாற்று எரிசக்தியை பயன்படுத்துதல், தூய்மையை கடைபிடித்தல் மற்றும் சுற்றுபுறச்சூழலை பாதுகாத்து பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்ளத்தக்க கிராம ஊராட்சியாக அமைத்தல். அனைவருக்கும் குடியிருக்க மலிவான, பாதுகாப்பான வீடு. தேவையான அடிப்படை சேவைகள் வழங்குதல் போன்றவற்றுடன். தேவையான அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட கிராம ஊராட்சியாக அமைத்தல்.

தகுதியுடைய அனைவரையும் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் இணைக்க வேண்டும். அனைவரும், தாங்கள் அரவணைப்புடன் கவனிக்கப்படுகிறார்கள் என்பதை உணர நடவடிக்கைகள் எடுத்தல். கிராம ஊராட்சியில் திறம்பட நடைபெறும் நல்ல ஆளுமையுடன் அனைத்து நலத்திட்ட பயன்கள், அடிப்படை சேவைகள் அனைத்தும் ஊராட்சியில்அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுதல்.

பாலின சமத்துவ அடிப்படையில் அனைவருக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்துதல், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை வலிமைப்படுத்தி பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துதல், நிலைத்த வளர்ச்சியை ஏற்படுத்தி அதன் பயன்களை பெறும் வகையில், இடைவெளிகளைக் குறைத்து, தரமான கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்தை தயாரித்து அதனை திறம்பட செயல்படுத்துவோம் என்று முடிவு எடுத்து அதன்படி செயல்படுவோம் என்று தீர்மானித்தல்.

நிலைத்த வளர்ச்சியை அடைவதில் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக பங்குள்ளது. அவர்களை முழு உத்வேகத்துடன், முடிவெடுக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்கள் வாழ்வில் மிகுந்த பாதிப்பு ஏற்படுத்தும் பிரச்னைகள் குறித்து நடவடிக்கை எடுத்தல்.

மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அரசின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புக்கள், கல்வி நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியோரை பங்காளர்களாக்கி அவர்களோடு இணைத்து பணிகளை செவ்வனே செய்து முடித்தல் உள்ளிட்ட இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரான்சிஸ் மகா ராஜன், உதவி இயக்குனர் (ஊராட்சி) கனகா, வேளாண்மை உதவி இயக்குனர்சண்முகசுந்தரம் மற்றும் குழந்தை மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள். மற்றும் வெங்கடாச்சலம், ஊராட்சி செயலாளர்.உள்ளாட்சி பிரதிநிதிகள், குத்துக்கல்வலசை ஊராட்சி மன்றத் தலைவர் சத்யராஜ், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் அழகுசுந்தரம் மற்றும் பிரியா ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன் ,இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கரம்மாள்,மைதீன் பாத்து, சந்திரா, மல்லிகா, கருப்பசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  4. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  5. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  6. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  7. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  8. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  9. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  10. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...